பத்ரா சால் குடிசை சீரமைப்பு திட்ட ஊழல்; சஞ்சய் ராவத்திற்கு காவல் நீட்டிப்பு

Webdunia
திங்கள், 22 ஆகஸ்ட் 2022 (22:35 IST)
சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சஞ்சய் ராவத் என்பவர் அமலாக்கத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கான காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மும்பையில் பத்ரா சால் குடிசை சீரமைப்பு திட்டத்தில் ரூ.1000 கோடிக்கும் மேல் முறைகேடு நடந்ததாகப் புகார் எழுந்துள்ள  வழக்கில் சிவசேனா தலைமைச் செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ராவத் எம்.பியின் நெருக்கிய தொடர்பில் இருந் பிரவின் ராவத்தை கடந்த பிப்ரவரியில் அமலாக்கத்துறை கைது செய்தனர்.

இம்முறைகேடு சம்பந்தமாக நடந்த பணப்பரிமாற்றம் தொடர்பாக சஞ்சய் ராவத்தை அமலாக்கத்துறை விசாரணைக்கு அழைத்துச் சென்றது.

இதையடுத்து கடந்த 1 ஆம் தேதி அவர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட அவருக்கு ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை காவல் விதிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று மீண்டும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில்,  நீதிபதி எம்.ஜி. தேஷ்பாண்டே சஞ்சய் ராவத்திற்கு வரும் ஆகஸ்ட் 22 வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து உத்தரவிட்டார்.

.இந்த நிலையில் சஞ்சய் ராவத்தின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்தது. எனவே, மும்பையில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் செயல்படும் சிறப்பு நீதிமன்றத்தின் கீழ் செயல்படும் சிறப்பு நீதிமன்றம் இன்று சய்சய் ராவத் ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது, நீதிபதி, அவருக்கு செப்டம்பர் 5 ஆம் தேதி வரை அமலாக்கத்துறை காவல் நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டேன்ஸ் ஆடலாம்.. தெருவுல நடந்தால் விஜய்க்கு முட்டி வலிக்கும்!.. மன்சூர் அலிகான் ராக்ஸ்!...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு தடை விதித்தது உச்ச நீதிமன்றம்

பிகாரில் வீசும் அதே அலை தமிழகத்திலும் வீசுகிறது: கோவையில் பிரதமர் மோடி பேச்சு

கருமுட்டையை உறைய வைத்து வேலையில் கவனம் செலுத்துங்கள்: ராம்சரண் மனைவியின் சர்ச்சை கருத்து..!

பிரதமர் மோடியின் காலில் விழுந்து ஆசி பெற்ற ஐஸ்வர்யா ராய்.. புகைப்படம் வைரல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments