7 பேர் விடுதலை குறித்து தமிழக ஆளுனர் எடுத்த முக்கிய நடவடிக்கை: திடீர் சிக்கலா?

Webdunia
வியாழன், 13 செப்டம்பர் 2018 (18:18 IST)
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளன், நளினி உள்பட 7 பேர் விடுதலை குறித்து தமிழக அரசு ஆளுனருக்கு பரிந்துரை செய்து விடுதலை செய்யலாம் என சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் அறிவித்தது

இதன்படி சமீபத்தில் கூடிய தமிழக அமைச்சரவை பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர்களையும் விடுதலை செய்ய ஆளுனருக்கு பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரையின் அடிப்படையில் தமிழக ஆளுனர் பன்சாரிலால் புரோஹித் விரைவில் நல்ல முடிவை எடுப்பார் என தமிழகமே எதிர்பார்த்து காத்து கொண்டிருந்தது

இந்த நிலையில் ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரின் விடுதலை தொடர்பான தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அனுப்பி வைத்துள்ளார். ஏற்கனவே மத்திய அரசு இந்த விடுதலையை எதிர்த்துள்ள நிலையில் தமிழக ஆளுனர் இந்த பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளதால் 7 பேர் விடுதலையில் சிக்கல் நீடிக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோட்டில் தவெக பொதுக்கூட்டம் நடக்குமா?!.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி!....

டெல்லிக்கு செல்லும் முன் பழனிச்சாமியுடன் சந்திப்பு.. நயினர் நாகேந்திரன் மூவ் என்ன?..

சசி தரூரின் தொடர் 'ஆப்சென்ட்': ராகுல் காந்தி தலைமையிலான கூட்டத்தை மீண்டும் தவிர்த்தார்

முஸ்லிம் அல்லாதோருக்கு மது விற்பனை செய்யலாம்! சவுதி அரேபியாவில் முதல் முறையாக அனுமதி..!

காருக்குள் திருமணமான தம்பதிகள் அந்தரங்கம்.. சிசிடிவி வீடியோ காட்டி மிரட்டி பணம் பறித்த கும்பல் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments