Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சாலையில் வெட்டப்பட்டுக் கிடந்த ரூபாய் நோட்டுகள்; அள்ளிய பொதுமக்கள்

சாலையில் வெட்டப்பட்டுக் கிடந்த ரூபாய் நோட்டுகள்; அள்ளிய பொதுமக்கள்
, செவ்வாய், 11 அக்டோபர் 2016 (13:14 IST)
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே நடு சாலையில் துண்டுதுண்டாக வெட்டப்பட்டு சிதறி கிடந்த ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் அள்ளிச் சென்றனர்.
 

 
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள கோழிப்பாக்கம் என்ற கிராமத்தில் ஓடையோரம் இந்திய ரூபாய் நோட்டுகள் காகிதம் வெட்டும் இயந்திரம் மூலம் துண்டுதுண்டாக வெட்டப்பட்டு பல துகள்களாக சிதறி கிடந்துள்ளது. 
 
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் அங்கு சிதறி கிடந்த ரூபாய் நோட்டுகளை வீட்டிற்கு அள்ளி சென்றனர். ஆனால், காலை வரை அந்த இடத்தில் பண துண்டுகள் எதும் தென்படவில்லை.
 
ஆனால், மதியம் 12 மணியளவில் ஓர் கார் அந்த இடத்தில் அங்கு நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்ததாகவும், மாலைக்கு மேல் மூட்டையில் இருந்து ரூபாய் நோட்டுகள் சிதறி கிடந்ததாகவும் என்று அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் கூறியுள்ளனர். 
 
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர் வேதரத்தினம் விசாரணை மேற்கொண்டார். மேலும், பொதுமக்கள் வீட்டிற்கு அள்ளிச்சென்ற பணதுண்டுகளையும் காவல்துறையினர் மீட்டனர்.
 
சிதறி கிடந்த பணம் எப்படி அங்கு வந்தது எனவும், ஏன் துண்டு துண்டாக வெட்டப்பட்டன என்றும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சசிகுமார் படுகொலையில் விசாரணைக்கு பயந்து தீக்குளித்த இந்து முன்னணி பிரமுகர் பலி