Publish Date: Mon, 03 Oct 2016 (23:06 IST)
Updated Date: Mon, 03 Oct 2016 (23:33 IST)
சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள ஏ.டி.எம்.,களுக்கு பணம் நிரப்புவதற்காக பாங்க் ஆப் பரோடா வங்கிக்கு சொந்தமான 1.18 கோடி ரூபாய் பணம் வாகனத்தில் எடுத்து செல்லப்பட்டது.
அந்த வாகனத்தை இசக்கிமுத்து என்பவர் ஓட்டி சென்றார். அவருடன் பாதுகாவலர் ஜோயல் இருந்தார். இந்நிலையில், புலியம்பட்டி என்னும் பகுதியில் வாகனத்தை நிறுத்தி விட்டு இருவரும் டீ குடிக்க சென்றுள்ளனர்.
அப்போது பாதுகாவலர் ஜோயலின் கவனத்தை திசை திருப்பிவிட்டு ஓட்டுனர் இசக்கிமுத்து பணத்துடன் வாகனத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டார். இதுகுறித்து, காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, தப்பி ஓடிய ஓட்டுனர் இசக்கிமுத்துவை தேடி வருகின்றனர்.