Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆன்லைன் சூதாட்டத்தால் கடன்.. வங்கியில் லட்சக்கணக்கில் திருடிய காசாளர்..!

Webdunia
வியாழன், 27 ஏப்ரல் 2023 (07:40 IST)
ஆன்லைன் சூதாட்டத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக வங்கியில் லட்சக்கணக்கில் திருடிய காசாளர் ஒருவர் குறித்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரத்தில் உள்ள வங்கியில் முகேஷ் என்பவர் காசாளராக பணிபுரிந்து வந்த நிலையில் அவர் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும் அதில் லட்சக்கணக்கில் நஷ்டம் அடைந்ததாகவும் தெரிகிறது.

இதனை அடுத்து அவர் வங்கியில் இருந்து 44 லட்சம் ரூபாய் பணத்தை திருடி திடீரென மாயமானதாக தகவல் வெளியானது. ஆன்லைன் சூதாட்டத்தால் ஏற்பட்ட கடனுக்காக வங்கி பணத்தை எடுத்து அந்த கடனை கொடுத்துவிடலாம் என திட்டமிட்டு அவர் வங்கியில் திருடியதாக தெரிகிறது.

இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை செய்த நிலையில் காசாளர் முகேஷ் வங்கியில் கட்டுக்கட்டாக பணத்தை எடுத்து தனது பையில் வைக்கும் சிசிடிவி காட்சி கண்டுபிடித்துள்ளனர்

இதனையடுத்து காசாளர் முகேஷை தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் அமலில் இருக்கும் நிலையில் மீண்டும் ஆன்லைன் சூதாட்டத்தால் ஒரு குற்றம் ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சீனாவில் இன்னொரு ஏஐ அறிமுகம்.. ஒரே வாரத்தில் ஓரம் கட்டப்பட்டதா டீப் சீக்?

இன்றும் காந்திஜி தொடர்ந்து கேலி செய்யப்பட வேண்டுமா? தமிழக அரசுக்கு ஆளுநர் ரவி கேள்வி..!

புலியின் சிறுநீரில் மருத்துவ குணம்.. முடக்கு வாதத்தை குணமாக்கும் என கூறி விற்பனை..!

மன்னிப்பு கேட்ட கல்லூரி மாணவிக்கு முத்தம் கொடுத்த இளைஞர்.. கைது செய்து சிறையில் அடைத்த போலீஸ்..!

மோடியும் கெஜ்ரிவாலும் இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவர்கள்.. ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments