Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘வாழை’ வலிமையாக பேசுகிறது..! மாரி செல்வராஜுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து.!

Senthil Velan
திங்கள், 2 செப்டம்பர் 2024 (11:49 IST)
'வாழை' திரைப்படத்தை பார்த்துவிட்டு இயக்குநர் மாரி செல்வராஜுக்கு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 
 
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் அண்மையில் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ள திரைப்படம் வாழை.  உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட வாழை படமும் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில் இயக்குனர் மாரி செல்வராஜுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உழைக்கும் மக்களின் வாழ்வியலையும் அவர்களின் வலியையும் பேசும் வாழை-யை சான் பிரான்சிஸ்கோவில் கண்டேன் என்று தெரிவித்துள்ளார். 
 
படைப்பாளி மாரி செல்வராஜ் பசியுடன் சிவனணைந்தான் தவித்தபோது, ஆயிரம் வாழைத்தார்களை நமது இதயத்தில் ஏற்றிவிட்டார் மாரி என்றும் பசிக் கொடுமையை எந்தச் சிவனணைந்தானும் எதிர்கொள்ளக் கூடாதென முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் உருவாக்கியதில் மகிழ்ச்சி பெற்றேன் என்றும் அவர் கூறியுள்ளார்.


ALSO READ: வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பள்ளிகள் திறப்பு..! மலர்களை கொடுத்து மாணவர்களை வரவேற்ற ஆசிரியர்கள்.!
 
 
காயங்கள் ஆறும் என்ற நம்பிக்கையுடன் மாற்றங்களை நோக்கிப் பயணத்தைத் தொடர்வோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.  தொடர்ந்து வெற்றிப் படங்களை எடுத்து வரும் மாரி செல்வராஜ் அவர்களுக்கு மீண்டும் வாழ்த்துகள் என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உயர் ரக சிகிச்சை தேவைப்படுவோர் தனியார் மருத்துவமனைக்கு செல்லுங்கள்: அமைச்சரின் சர்ச்சை பேச்சு

ராய்ட்டர்ஸ் உள்பட 2,355 கணக்குகளை இந்திய அரசு முடக்க சொன்னது: எக்ஸ் அதிர்ச்சி தகவல்..!

திமுகவிடம் மதிமுக 25 தொகுதிகள் கேட்கிறதா? வைகோ விளக்கம்..!

கோவில் கும்பாபிஷேகம் ஒன்றும் அரசியல் நிகழ்ச்சி அல்ல.. செல்வப்பெருந்தகைக்கு பாஜக கண்டனம்..!

பேய் ஓட்டுவதாக கூறி 6 மணி நேரம் தாயை அடிக்க வைத்த மகன்.. அதன்பின் நடந்த விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments