Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுகவுடன் கூட்டணியா? ஸ்டாலினை சந்தித்த பின் கே.பாலகிருஷ்ணன் பேட்டி

Webdunia
ஞாயிறு, 8 அக்டோபர் 2023 (15:19 IST)
வரும் 2024 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதிமுக மற்றும் திமுக கூட்டணிகள் இப்போதே கூட்டணி பேச்சு வார்த்தையை தொடங்கிவிட்டன. 
 
குறிப்பாக திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் திமுக தற்போது பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் அவர்களை மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் அவர்கள் சந்தித்தார். 
 
இந்த சந்திப்பின்போது திமுக கூட்டணியில்  போட்டியிடும் தொகுதிகள் குறித்து பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதாக தெரிகிறது. இதனை அடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது, ‘திமுக கூட்டணியில் நாடாளுமன்ற தேர்தலில் கடந்த முறை போட்டியிட்ட தொகுதிகளை விட கூடுதல் தொகுதிகளை கேட்போம். அதிமுகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை’ என்று தெரிவித்தார்.
 
 திமுக கூட்டணியில் மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்ட தொகுதி கிடைக்கவில்லை என்றால் அதிமுக கூட்டணிக்கு வருவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிறந்து 38 நாள் ஆன குழந்தை.. குளியல் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்த தாய்..!

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. ஒரு வாரமாக மாறாமல் இருக்கும் வெள்ளி விலை..!

வாக்காளர் அடையாள அடையாள அட்டையில் பெண்ணின் புகைப்படத்திற்கு பதில் முதல்வரின் படம்.. அதிர்ச்சி தகவல்..!

மனைவியுடன் உல்லாசம்! உயிர் நண்பனின் உயிரை எடுத்த கணவன்! - கர்நாடகாவில் அதிர்ச்சி!

அமெரிக்க அதிபர் டிரம்பை கொல்வது மிக எளிது: ஈரான் தலைவர் கருத்துக்கு காமெடி பதில் சொன்ன டிரம்ப்!

அடுத்த கட்டுரையில்
Show comments