கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்த வந்தபோது அவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் ஜாமீன் மனுக்களை ரத்து செய்து மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை நடந்த தினத்தில் கரூரில் வருமானவரித்துறை அதிகாரிகளை தாக்கிய சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் கிழமை நீதிமன்றத்தின் ஜாமீன் மற்றும் முன்ஜாமின் உத்தரவு ரத்து செய்யப்படுவதாக மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜாமீன் பெற்ற மற்றும் முன் ஜாமீன் பெற்ற அனைவரும் இன்னும் மூன்று நாட்களில் கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் இந்த வழக்கை விசாரித்து உரிய உத்தரவு வு பிறப்பிக்கவும் கரூர் குற்றவியல் நீதிமன்றத்திற்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.