Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இறந்ததாக சான்றளிக்கப்பட்ட குழந்தைக்கு இதயத்துடிப்பு: தேனியில் பரபரப்பு!

Advertiesment
இறந்ததாக சான்றளிக்கப்பட்ட குழந்தைக்கு இதயத்துடிப்பு: தேனியில் பரபரப்பு!
, ஞாயிறு, 4 ஜூலை 2021 (14:28 IST)
இறந்து போய்விட்டதாக மருத்துவர்களால் சான்றளிக்கப்பட்ட குழந்தைக்கு திடீரென இதயத்துடிப்பு ஏற்பட்டதால் தேனி அருகே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
தேனி அரசு மருத்துவமனையில் இறந்ததாக சான்றிதழ் வழங்கப்பட்ட குழந்தைக்கு மயானத்தில் இறுதிச் சடங்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தபோது திடீரென இதயத்துடிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது 
 
தேனி அருகே உள்ள ஒரு தம்பதிக்கு குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தை இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இறப்பு சான்றிதழ் அளிக்கப்பட்டவுடன் குழந்தையை மயானத்திற்கு பெற்றோர்கள் எடுத்து சென்ற போது குழந்தைக்கு திடீரென இதயத்துடிப்பு இருப்பதை கண்டுபிடித்தனர் 
 
இதனை அடுத்து அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சியுடன் பெற்றோர் குழந்தையை மீண்டும் தேனி அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். தேனி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் தற்போது குழந்தை அனுமதிக்கப்பட்டு மருத்துவர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தேனி அரசு மருத்துவமனை அலட்சியம் குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்த சம்பவம் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெடித்து சிதறிய ராணுவ விமானம்; 17 பேர் பலி! – பிலிப்பைன்ஸில் அதிர்ச்சி!