Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”விடுதலை புலிகள் தான் தமிழர்களை கொன்றது” சீமானுக்கு பதிலடி தந்த காங்கிரஸ் தலைவர்

Arun Prasath
திங்கள், 14 அக்டோபர் 2019 (14:38 IST)
சிங்கள ராணுவத்தை விட பெரும்பாலான தமிழர்களை கொன்றது விடுதலை புலிகள் தான் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சீமானுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை குறித்து சர்ச்சையாக சீமான் பேசியதை தொடர்ந்து அவர் மீது தேசிய ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசுதல், வன்முறையை தூண்டும் வகையில் பேசுதல் ஆகிய இரண்டு பிரிவுகளின்  கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மேலும், நாம் தமிழர் கட்சியின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்ய வேண்டும் என தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார். இந்த சர்ச்சை பேச்சுக்கு பதிலளித்த சீமான், ”இது போல் நான் பல வழக்குகளை சந்தித்துள்ளேன், எனக்கு இது ஒன்றுமே இல்லை” என கூறினார். மேலும் “காங்கிரஸார் எந்த பிரச்சனைக்கு போராடியுள்ளனர்? இதற்காகவாவது போராடுவது மகிழ்ச்சி, பிரபாகரனை முன்வைத்து தான் எனது அரசியல் பரப்புரைகள் இருக்கும்” எனவும் கூறினார்.

இதனை தொடர்ந்து காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி சீமானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், சிங்கள ராணுவத்தை விட விடுதலைப் புலிகள்தான் தமிழர்களை அதிகம் கொன்றது என கூறியுள்ளார். மேலும் ஜனநாயக வழியில் போராடினால் தான் வெற்றி கிடைக்கும் எனவும், ஆயுத போராட்டங்கள் நிலைக்காது எனவும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அடுக்குமாடி கட்டிடங்களுக்கு 1% தீயணைப்பு பாதுகாப்பு வரி: அரசின் அதிரடி அறிவிப்பு!

பாலியல் உறவுக்கான வயதை 16-ஆக குறைக்க உச்சநீதிமன்றத்திடம் வேண்டுகோள்: வழக்கறிஞர் வாதம்

இந்திய-வங்கதேச எல்லையில் 16.55 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல்: சந்தேக நபர் ஒருவர் கைது!

அப்பா, அம்மாவுக்கு உடம்பு சரியில்லையா? 30 நாட்கள் லீவு.. மத்திய அரசு ஊழியர்களுக்கு சலுகை..!

இங்கிலாந்து உடனான வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து: இந்தியாவுக்கு என்னென்ன லாபம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments