Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அயோத்தி நில வழக்கு - மத்தியஸ்தக் குழு அறிக்கை தாக்கல்....

Advertiesment
அயோத்தி நில வழக்கு - மத்தியஸ்தக் குழு அறிக்கை தாக்கல்....
, வியாழன், 1 ஆகஸ்ட் 2019 (16:37 IST)
நீதிபதி கலிஃபுல்லா , ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் சீலிட்ட கவரில்   அறிக்கை தாக்கல் செய்தனர்.
காலம் காலமாக இந்து - இஸ்லாம் மக்களிடையே நீடித்து வருவது அயோத்தி நிலம் யாருக்கு சொந்தம் என்பது. இது தொடர்பாக வழக்கு உச்ச நீதிமன்றம் நீண்டகாலம் நடந்து வருகிறது. எனவே இவ்விவகாரத்துக்கு தீர்வு காணும் பொருட்டு உச்ச நீதிமன்றம் மூன்று பேர் கொண்ட ஒரு மத்தியஸ்த குழுவை சில மாதங்களுக்கு முன்னர் நியமித்தது.
 
இந்நிலையில்  சர்ச்சைக்குரிய அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில் நீதிபதி கலிஃபுல்லா , ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர்  அடங்கிய மத்தியஸ்த குழு இன்று சீலிட்ட உறையில் உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ததுள்ளது.
 
 முன்னர், சமசர பேச்சில் உடன்பாடு ஏற்படவில்லை எனில் உச்ச நீதிமன்றமே விசாரிக்கும் என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வீட்டை காலி செய்யுங்க....அமலாக்கத்துறை கார்த்தி சிதம்பரத்திற்கு நோட்டீஸ் !