Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடுரோட்டில் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம்.. தட்டிக்கேட்ட ஆட்டோ டிரைவர் கொலை..!

Advertiesment
நடுரோட்டில் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம்.. தட்டிக்கேட்ட ஆட்டோ டிரைவர் கொலை..!
, வெள்ளி, 21 ஜூலை 2023 (09:04 IST)
சென்னையில் நடு ரோட்டில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் செய்ததை தட்டி கேட்டு ஆட்டோ டிரைவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
சென்னை அம்பத்தூரில் உள்ள ஒரு பகுதியில் அஜய் என்பவரின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. அவர் தனது பிறந்தநாளை நண்பர்களுடன் சேர்ந்து நடுரோட்டில் கேக் வெட்டி கொண்டாடினார். 
 
இந்த நிலையில் அந்த வழியாக ஆட்டோவில் வந்த  காமேஷ் என்பவர் நடு ரோட்டில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினால் எப்படி ஆட்டோ செல்வது என்று கூறியுள்ளார் 
 
இதனிடையே அவருக்கும் அஜய் மற்றும் அவரது நண்பர்களுக்கும் ஏற்பட்ட தகராறில் அஜய் நண்பர்கள் கொடூரமாக ஆட்டோ டிரைவரை தாக்கியதாகவும் இதில் சம்பவ இடத்திலேயே காமேஷ்  கொலை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் அஜய் மற்றும் அவருடைய நண்பர்கள் தலைவராகி உள்ள நிலையில் போலீசார் அவர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அம்பத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தக்காளி விலை படிப்படியாக குறைவு.. மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புமா?