Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மேல்மருவத்தூரில் விதிகளை மீறி பேனர்கள் - புகார் கொடுத்த டிராபிக் ராமசாமி மீது தாக்குதல்

மேல்மருவத்தூரில் விதிகளை மீறி பேனர்கள் - புகார் கொடுத்த டிராபிக் ராமசாமி மீது தாக்குதல்
, செவ்வாய், 28 பிப்ரவரி 2017 (18:56 IST)
மேல்மருவத்தூரில் விதிகளை மீறி வைக்கப்பட்டிருந்த ஏராளமான பேனர்களை அகற்றுமாறு காவல் நிலையத்தில் புகார் அளித்த சமூக ஆர்வலர் மீது சில பக்தர்கள் மற்றும் பங்காரு அடிகளாரின் ஆட்கள் தாக்குதல் தொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.


 

 
சென்னையிலிருந்து 97 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் மேல்மருவத்தூரில், பங்காரு அடிகளார் என்பவர் ஆதிபராசக்தி கோவிலை கட்டி வணங்கி வந்தார். அதன்பின் அவரே கடவுளாகவும் சித்தரிக்கப்பட்டார். இதையடுத்து, தமிழகத்தின் உள்ள பல பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் அந்த கோவிலுக்கு தினமும் வந்து செல்கின்றனர்.
 
இந்நிலையில், தமிழகமெங்கும் விதிமுறைகளை மீறி வைக்கப்பட்டிருக்கும் பேனர்கள் மற்றும் போஸ்டர்களை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் டிராஃபிக் ராமசாமி இன்று மேல்மருவத்தூருக்கு சென்று, அங்கு சாலையோரங்களில் விதிமுறைகளை மீறி வைக்கப்பட்டிருக்கும் பங்காரு அடிகளாரின் புகழ் பாடும் பேனர்களை அகற்ற வேண்டும் என மேல்மருவத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததாக தெரிகிறது.
 
இதை தெரிந்து கொண்ட பங்காரு அடிகளாரின் ஆட்கள் மற்றும் சில பக்தர்கள் டிராஃபிக் ராமசாமியை தாக்கியதாக தெரிகிறது. இதுகுறித்து மீண்டும் காவல் நிலையம் சென்று ராமசாமி புகார் கொடுத்துள்ளார். ஆனால், அதை போலீசார் ஏற்கவில்லை எனத் தெரிகிறது. எனவே, நான் நிதிமன்றத்தில் பார்த்துக் கொள்கிறேன் எனக்கூறிவிட்டு டிராஃபிக் ராமசாமி அங்கிருந்து கிளம்பி சென்னை வந்துவிட்டார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

போங்கடா போக்கத்த பசங்களா: ஓபிஎஸ்-ஐ திட்டி தீர்த்த அதிமுக நாளேடு!