Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.90 ஆயிரம் பறிபோன அதிர்ச்சியில் உயிரிழந்த சென்னை பெண்

Webdunia
திங்கள், 22 ஜனவரி 2018 (22:40 IST)
சென்னை அண்ணா நகரை சேர்ந்த ஜெயலட்சுமி என்ற வயதான பெண் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் சிறுக சிறுக சேர்த்து வைத்த ரூ.90 ஆயிரம் பணம் ஆன்லைன் மூலம் ஒரே நாளில் கொள்ளையடிக்கப்பட்டதை அறிந்த அதிர்ச்சியில் மாரடைப்பால் உயிரிழந்தார்.

சென்னை  பெண் ஜெயலட்சுமிக்கு நேற்று ஒரு மர்ம போன்கால் வந்தது. அதில் தாங்கள் வங்கியில் இருந்து பேசுவதாகவும், உங்களுடைய ஏடிஎம் அட்டை காலாவதி ஆகிவிட்டதால் புதிய ஏடிஎம் அட்டை பெற உங்களுடைய ஏடிஎம் அட்டை எண் மற்றும் ஓடிபி எண்ணை தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்கப்பட்டுள்ளது.

இதனை நம்பிய ஜெயலட்சுமி ஏடிஎம் அட்டை எண் மற்றும் தனது மொபைலுக்கு வந்த ஓடிபி எண்ணை கூறியுள்ளார். பின்னர் மறுநாள் வங்கிக்கு சென்று புதிய ஏடிஎம் அட்டையை கேட்டபோதுதான் தன்னுடைய வங்கி கணக்கில் இருந்து ரூ.90 ஆயிரமும் எடுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த அதிர்ச்சியை தாங்க முடியாத ஜெயலட்சுமி உடனே மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாதுகாப்பு படையினரின் என்கவுண்டர்.. 31 நக்சல்கள் பலி.. சத்தீஸ்கரில் பரபரப்பு..!

PM SHRI திட்டத்தில் இணைய மறுத்ததால் தமிழ்நாட்டிற்கு நிதி தரவில்லை: முதல்வர் ஸ்டாலின்

டெல்லியை அடுத்து மேற்கு வங்கத்திலும் பாஜக அரசு.. சுவேந்து அதிகாரி நம்பிக்கை..!

டெல்லி முதல்வர் அதிஷி ராஜினாமா.. புதிய ஆட்சி பதவியேற்பது எப்போது?

உண்மையான பதில் வரும்வரை கேள்விகள் தொடரும்.. திமுக அரசை சரமாரியாக விமர்சனம் செய்த அண்ணாமலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments