Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கடைசி நாளான 17 ஆம் தேதி அத்திவரதர் தரிசனம் ரத்து: காரணம் என்ன??

கடைசி நாளான 17 ஆம் தேதி அத்திவரதர் தரிசனம் ரத்து: காரணம் என்ன??
, வியாழன், 8 ஆகஸ்ட் 2019 (12:38 IST)
காஞ்சிபுரம் அத்திவரதரின் தரிசனம் வரும் 16 ஆம் தேதியுடன் நிறுத்தம் கடைசி நாளான 17 ஆம் தேதி தரிசனம் ரத்து என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலின் மூலவர் அத்தி வரதர் இவர் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அனந்த சரஸ் குளத்தில் இருந்து வெளியே வந்து 48 நாட்கள் பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
 
அந்த வகையில் கடந்த 1979 ஆம் ஆண்டிற்கு பிறகு இந்த ஆண்டு வெளியே வந்து ஜூலை 1 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 17 ஆம் தேதி வரை அத்திவரதர் பக்தர்களுக்கு தருஇசனம் வழங்குவார் என கூறப்பட்டிருந்தது. 
webdunia
ஆனால், இப்போது ஒருநாள் முன் கூட்டியே அத்திவரதர் தரிசனம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆம், 16 ஆம் தேதி இரவோடு அத்திவரதர் தரிசனம் நிறுத்தப்படுகிறதாம். 
 
16 ஆம் தேதி இரவு வரை வரும் பக்தர்களுக்கு விடிய விடிய தரிசனம் வழங்கப்படும். அதன் பின்னர் 17 ஆம் தேதி ஆகம விதிகளின்படி பூஜைகள் மேற்கொண்டு மீண்டும் குளத்திற்குள் வைக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
கடந்த 38 நாட்களில் இதுவரை 70.25 லட்சம் பக்தர்கள் தரித்துள்ளனர். அதோடு நேற்று மட்டும் 3 லட்சத்திற்கும் அதிகமாக பக்தர்கள் தரித்துள்ளனர் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாட்ஸ் ஆப் மூலம் தலாக் சொன்ன கணவர்: முத்தலாக் தடை சட்டம் நிறைவேறிய பிறகும் நடக்கும் கொடுமை