Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சட்டமன்ற வளாகத்தில் இருந்தே அதிமுக வெளியேற சபாநாயகர் உத்தரவு!!

Webdunia
புதன், 18 ஆகஸ்ட் 2021 (10:23 IST)
சட்டமன்ற வளாகத்தில் இருந்தே அதிமுக உறுப்பினர்களை வெளியேற சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.

 
தமிழக ஆண்டு பட்ஜெட் மீதான கூட்டத்தொடர் தமிழக சட்டமன்றத்தில் நடந்து வருகிறது. மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் நடைபெற இருப்பதால் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே கூட்டத்தொடரை முடித்துக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம் தொடர்பான விவகாரம் மீண்டும் விசாரிக்கப்படும் என தெரிவித்தார். இதை எதிர்த்து அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டதால் பரபரப்பு எழுந்தது. 
 
இந்நிலையில் அதிமுகவுடன் மற்ற எதிர்கட்சிகளான பாமக, பாஜகவும் சட்டப்பேரவையில் வெளியேறியுள்ளனர். பிறகு வளாகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் அனுமதியின்றி பேரவையில் அதிமுகவினர் பிரச்சனையை எழுப்பக்கூடாது என்று சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.
 
மேலும், பதாகைகளை கொண்டுவந்து அவையில் அதிமுகவினர் கூச்சல் எழுப்பியது திட்டமிட்ட செயல். இதனால் சட்டமன்ற வளாகத்தில் இருந்தே அதிமுக உறுப்பினர்களை வெளியேற சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிஜிட்டல் அரெஸ்ட் என மிரட்டி ரூ.11 லட்சம் மோசடி.. விரக்தியில் ஐடி ஊழியர் தற்கொலை..!

எம்ஜிஆர் பெயரில் புதிய கட்சி!? விஜய்யுடன் கூட்டணி? - ஓபிஎஸ் தர்மயுத்தம் 2.0!?

இன்று மீண்டும் சரிந்தது பங்குச்சந்தை.. முதலீடு செய்ய சரியான நேரமா?

ரூ.73000க்கும் குறைந்தது தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் இவ்வளவு சரிவா?

ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி அதிரடி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments