Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Monday, 31 March 2025
webdunia

ஆளுனர் மீதான தீர்மானம்..! சட்டமன்றத்தின் கதவுகளை மூடி வாக்கெடுப்பு!

Advertiesment
சட்டசபை
, திங்கள், 10 ஏப்ரல் 2023 (11:40 IST)
இன்று சட்டமன்றத்தில் ஆளுநருக்கு எதிராக தீர்மானம் இயற்றப்பட்ட நிலையில் இந்த தீர்மானத்தின் வாக்கெடுப்பின்போது சட்டமன்றத்தின் கதவுகள் மூடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 
 
தமிழக ஆளுநருக்கு எதிரான தீர்மானத்தை இன்று தமிழக முதல்வர் முன்மொழிந்த நிலையில் அந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த தீர்மானத்தின் போது சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் என்ற பதவியில் இருந்து ஓ பன்னீர்செல்வத்தை மாற்றாததை கண்டித்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். 
 
இந்த நிலையில் சட்டசபை சபாநாயகரின் உத்தரவின்பேரில் சட்டப்பேரவை கதவுகளை மூடி ஆளுநருக்கு எதிரான தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 2017 ஆம் ஆண்டுக்கு பிறகு சட்டமன்றத்தில் கதவுகளை மூடி வாக்கெடுப்பு நடத்துவது இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தனியா நிப்பா.. அவ பக்கத்துல போகாதீங்க? பீதியை கிளப்பும் பெண் சைக்கோ கில்லர்! – Serbian Dancing Lady!