Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’பரபரப்பு’ - பந்துவீச்சாளரை அடிக்க பாய்ந்த அஸ்வின்! - வீடியோ

Webdunia
வெள்ளி, 9 செப்டம்பர் 2016 (20:30 IST)
திண்டுக்கல் அணிக்கும் சேப்பாக்கம் அணிக்கும் நடந்த தமிழ்நாடு பிரிமீயர் லீக் போட்டியில், சேப்பாக்கம் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.


 


சேப்பாக்கம் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 20 ஓவர்கள் முடிவில் 172 ரன்கள் எடுத்தது. அதனை தொடர்ந்து களமிறங்கிய திண்டுக்கல் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்த நிலையில் சாய் கிஷோரின் 16 வது ஓவர் 2வது பந்தில் அஸ்வின் ஒரு பவுண்டரி அடித்தார். இதனால் சாய் அதிருப்தி அடைந்தார். அதனை தொடர்ந்து 5வது பந்தில் அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து ஆடிய ஜெகதீசன் ஆட்டமிழந்தார்.

பவுண்டரி போன வெறுப்பில் இருந்த சாய், ஜெகதீசன் அவுட்டானவுடன், அவர் அருகில் சென்று ஏதோ முணுமுணுத்து சாய்யின் மார்பில் தன் இரு கைகளையும் வைத்து தள்ளிவிட்டார். இதை பார்த்து, ஆவேசத்துடன் வந்த அஸ்வின் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் சக வீரர்களும், நடுவர்களும் வந்து அவர்களை சமாதானப்படுத்தினர். பின்பு அவர்கள் கலைந்து சென்றனர். இதன் பிறகு பரபரப்பாக சென்ற ஆட்டத்தில் சேப்பாக்கம் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் திண்டுக்கல் அணியை வீழ்த்தி வெற்றிப்பெற்றது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புஷ்பா படத்தால் தான் மாணவர்கள் கெட்டு போனார்கள்: தலைமை ஆசிரியை வேதனை..!

தருமபுரி பட்டாசுக் கிடங்கு விபத்து: பலியான குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு.. அன்புமணி கோரிக்கை..!

ஒட்டுமொத்த ஐரோப்பிய மக்கள் தொகையை விட கும்பமேளாவில் நீராடியவர்கள் அதிகம்: பிரதமர் மோடி

திமுகவின் இரட்டை வேடம் இனியும் செல்லுபடியாகாது..! அண்ணாமலை

கொஞ்சம் இரக்கம் காட்டுங்கள்.. பிரதமர் மோடிக்கு பிரியங்கா காந்தி கடிதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments