முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்த விசாரணை நடத்தி வரும் ஆறுமுகச்சாமி மேலும் ஒரு மாதம் அவகாசம் கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டு கடந்த சில ஆண்டுகளாக அந்த ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது
இந்த நிலையில் சமீபத்தில் இந்த ஆணையம் விசாரணையை முடித்து விட்டதாகவும் அரசுக்கு அறிக்கை அனுப்ப இருப்பதாகவும் கூறியிருந்தது. இந்த நிலையில் அரசுக்கு அறிக்கை அனுப்புவதற்கு மேலும் ஒரு மாத காலம் அவகாசம் வேண்டும் என தமிழக அரசுக்கு ஆறுமுகசாமி ஆணையம் கடிதம் எழுதி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
ஜூன் 24ம் தேதியுடன் ஆறுமுகச்சாமி ஆணையத்தின் கால அவகாசம் முடிவடைய உள்ள நிலையில் ஜூலை வரை நீட்டிப்பு வழங்க அரசுக்கு கடிதம் எழுதி உள்ளது, அரசும் இந்த நீட்டிப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது