Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பன்னீரின் ரகசியங்கள்: எடப்பாடியிடம் போட்டுக்கொடுத்த ஆறுகுட்டி எம்எல்ஏ!

பன்னீரின் ரகசியங்கள்: எடப்பாடியிடம் போட்டுக்கொடுத்த ஆறுகுட்டி எம்எல்ஏ!

Advertiesment
பன்னீரின் ரகசியங்கள்: எடப்பாடியிடம் போட்டுக்கொடுத்த ஆறுகுட்டி எம்எல்ஏ!
, செவ்வாய், 25 ஜூலை 2017 (10:28 IST)
அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் போர்க்கொடி தூக்கி தனி அணியாக செயல்பட்டு வந்தபோது கவுண்டம்பாளையம் எல்எல்ஏ ஆறுகுட்டி ஓபிஎஸ் ஆதரவு நிலைப்பாடு எடுத்து அவருடன் இருந்தார்.


 
 
ஆனால் தற்போது அவர் ஓபிஎஸ் அணியில் இருந்து அதிருப்தி தெரிவித்து எடப்பாடி அணிக்கு தாவியுள்ளார். இது ஓபிஎஸ் அணிக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது. இந்நிலையில் எம்எல்ஏ ஆறுகுட்டி மூலம் எடப்பாடி ஓபிஎஸ் பற்றிய பல ரகசியங்களை தெரிந்து கொண்டதாக கூறப்படுகிறது.
 
ஆறுகுட்டியை நேற்று கோவை விமானநிலையத்தில் சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி அவருடன் 15 நிமிடங்கள் பேசியதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் போது ஓபிஎஸ் பற்றிய பல தகவல்களை ஆறுகுட்டி மூலம் எடப்பாடி தெரிந்து கொண்டுள்ளார்.
 
குறிப்பாக ஓபிஎஸ்-க்கு திமுக தொடர்பு உள்ளதா, மத்திய அரசுடன் உள்ள உறவு போன்றவை குறித்து அப்படியோ ஒப்பித்துள்ளாராம் ஆறுகுட்டி. ஸ்டாலினுடன் ஓபிஎஸ் பேசிக்கொண்டு இருப்பதாகவும், சசிகலா எதிர்ப்பு நிலைப்பாட்டில் ஓபிஎஸ் இருக்க வேண்டும் என ஸ்டாலின் அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
 
டெல்லி மேலிடம் கூறியதாக பலமுறை எங்களை அமைதியாக இருக்க சொல்லுவார் என ஆறுகுட்டி பன்னீரின் பல ரகசியங்களை எடப்பாடியிடம் போட்டுக்கொடுத்ததாக அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தினகரன் ஆதரவு எம்எல்ஏ தங்கதமிழ்செல்வனை விரட்டி அடித்த பொதுமக்கள்!