Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆருத்ரா கோல்டு விவகாரம்: ஆர்.கே.சுரேஷின் சொத்துக்களை முடக்க முடிவு

Advertiesment
ஆருத்ரா கோல்டு விவகாரம்: ஆர்.கே.சுரேஷின் சொத்துக்களை முடக்க முடிவு
, செவ்வாய், 26 செப்டம்பர் 2023 (14:10 IST)
ஆருத்ரா கோல்டு விவகாரத்தில் நடிகர் ஆர்.கே. சுரேஷ் 15 கோடி வாங்கியதாக குற்றச்சாட்டு கூறப்படும் நிலையில் அவரது சொத்துகளை முடக்க பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் முடிவெடுத்துள்ளனர்.

ஆருத்ரா கோல்டு மோசடி விவகாரம் தமிழக முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதில் நடிகர் ஆர்கே சுரேஷ் சம்பந்தப்பட்டிருப்பதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் ஆருத்ரா கோல்ட் டிரேடிங் மோசடி விவகாரத்தில் நடிகர் ஆர்கே சுரேஷ் ரூபாய் 15 கோடி வாங்கியது அம்பலம் ஆகி உள்ளது. மேலும் 500 முகவர்களுக்கு சம்மன் அனுப்ப பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்தனர்

இந்த மோசடியில் 800 கோடி ரூபாய் வசூலித்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குற்றப்பத்திரிகை தொடர்பான ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

நடிகர் ஆர்.கே. சுரேஷ் பல  மாதங்களுக்கு மேலாக வெளிநாட்டில் இருப்பதால் அவர் சென்னை வந்தவுடன் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில். ஆருத்ரா மோசடி வழக்கில் தொடர்ந்து சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் பாஜக நிர்வாகியும், நடிகருமான ஆர்.கே.சுரேஷின் சொத்துக்களை முடக்க பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

தற்போது துபாயில் உள்ள ஆ.கே.சுரேஷை அந்த நாட்டை தொடர்பு கொண்டு பரஸ்பர சட்ட நடவடிக்கை முறையில் இந்தியா அழைத்துவர நடவடிக்கை மேற்கொள்ளவதாகவும் தகவல் வெளியாகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிமுக கூட்டணியில் தொடருவோம்: புரட்சி பாரதம் கட்சி அறிவிப்பு