Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தேர்வறையில் பேசினால் காட்டி கொடுக்கும் சாப்ட்வேர்: சென்னையில் பயன்படுத்த திட்டம்

தேர்வறையில் பேசினால் காட்டி கொடுக்கும் சாப்ட்வேர்: சென்னையில் பயன்படுத்த திட்டம்
, செவ்வாய், 3 மார்ச் 2020 (08:09 IST)
தேர்வறையில் பேசினால் காட்டி கொடுக்கும் சாப்ட்வேர்
தேர்வுகளில் மாணவர்களின் முறைகேடுகளைத் தடுப்பதற்காக ஆர்ட்டிபீசியல் இன்டெலிஜன்ஸ் என்ற முறையில் புதிய சாஃப்ட்வேர் தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த சாப்ட்வேரை சென்னையில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகம் பயன்படுத்த முடிவு செய்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது
 
இதுகுறித்து தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சுதா சேஷய்யன் சென்னை கிண்டியில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 
 
கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய எம்.பி.பி.எஸ் தேர்வுகள் சிசிடிவி காமிராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டது. ஆனால் வரும் மே மாதம் நடைபெறும் முதுநிலை மருத்துவப் படிப்பு தேர்வுகள் நடைபெறும்போது அதில் முறைகேடுகள் நிகழ்வதை தடுக்க  ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் என்ற சாப்ட்வேர் பின் பற்றப்படவுள்ளது. 
 
தேர்வு அறையில் இரு மாணவர்கள் பேசிக்கொண்டாலோ அல்லது கண்காணிப்பாளர் விடைகளை சொல்லிக்கொடுத்தாலோ உடனடியாக இந்த சாப்ட்வேர் எங்களுக்கு தகவல் தந்துவிடும். இதனால் தேர்வு முறைகேடுகள் முற்றிலும் தடுக்கப்படும்’ என்று சுதா சேஷையன் கூறினார்.   
 
இந்த முறையை அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பயன்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி - வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி !