அரியர் மாணவர்களின் அரசனே! – போஸ்டர் ஒட்டிய அரியர் பாய்ஸ்!

Webdunia
வியாழன், 27 ஆகஸ்ட் 2020 (09:34 IST)
கொரோனா காரணமாக அரியர் தேர்வுகள் எழுதாத மாணவர்கள் அனைவருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்ச்சி அறிவித்துள்ள நிலையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் வைரலாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் பள்ளி, கல்லூரிகள் இயங்காத நிலையில் கல்லூரி மாணவர்களுக்கு இறுதி ஆண்டு மாணவர்கள் தவிர்த்து அனைவருக்கும் தேர்ச்சி அளிக்கப்பட்டது. ஆனால் மறுதேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வுகள் நடக்குமா என்பது குறித்து அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது.

இந்நிலையில் மறுதேர்வு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி இறுதி ஆண்டு பாடங்களின் மறுதேர்வை தவிர மற்ற செமஸ்டர் பாடங்களில் மறுதேர்வு எழுத விண்ணப்பித்திருந்த மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி வழங்கப்படுவதாக உத்தரவிட்டுள்ளார்.

காலம்காலமாக அரியர் எழுதி வரும் பலர் எடப்பாடி பழனிசாமியின் இந்த உத்தரவிற்கு வாழ்த்து தெரிவித்து போஸ்டர்கள் ஒட்டத்தொடங்கியுள்ளனர். அவ்வாறாக ஒட்டப்பட்டுள்ள ஒரு போஸ்டரில் “அரியர் மாணவர்களின் அரசனே” என முதல்வரை புகழ்ந்துள்ள அவர்கள் திருக்குறளை முன்னுதாரணம் காட்டி நன்றி தெரிவித்துளனர். இதுகுறித்த மீம்களும் வைரலாகி வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெரினா கடற்கரைக்குச் செல்லத் தடை நீட்டிப்பு: மோசமான வானிலை காரணமாக நடவடிக்கை!

புயலால் இலங்கையில் சிக்கி தவித்த இந்தியர்கள்.. அதிரடியாக மீட்ட இந்திய விமானப்படை..!

சிலிண்டர் விலை 10 ரூபாய்க்கும் மேல் குறைவு.. வழக்கம்போல் வீட்டு சிலிண்டர் விலையில் மாற்றமில்லை..!

வாரத்தின் முதல் நாளே பங்குச்சந்தை உயர்வு.. சென்செக்ஸ் 86000ஐ தாண்டி உச்சம்..!

ஒரு லட்சத்தை நெருங்கிவிட்டது தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் ரூ.720 அதிகம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments