Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிறைகள் சமூக விலகலுக்கு உகந்த இடமல்ல – அற்புதம் அம்மாள் வேண்டுகோள் !

சிறைகள் சமூக விலகலுக்கு உகந்த இடமல்ல – அற்புதம் அம்மாள் வேண்டுகோள் !
, திங்கள், 30 மார்ச் 2020 (16:15 IST)
தமிழகத்தில் கொரொனா வைரஸ் வேகமாகப் பரவி வரும் சிறைச்சாலைகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இருப்பவர்களை பரோலில் விடுக்க வேண்டுமென அற்புதம் அம்மாள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,00,000 ஐ நெருங்கியுள்ளது. இந்தியாவில் 1000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இன்று வரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67 ஆக உள்ளது. வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள விசாரணைக்கைதிகளை ஜாமீனில் விடுதலை செய்யவும் பரோல் கேட்பவர்களுக்கு அளிப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்படுவதாக சட்டத்துறை அமைச்சர் சி வி சண்முகம் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் ராஜீவ் கொலையில் சிக்கி 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் பேரறிவாளனின் தாயார அற்புதம் அம்மாள் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘மாண்புமிகு @CMOTamilNadu @CVShanmugamofl @Vijayabaskarofl நோயாளியாளிகள், 10ஆண்டு தண்டனை முடித்த சிறைவாசிகளை Conditional Leaveல் அனுப்ப கனிவுடன் ஆவன செய்யுங்கள். 24 மணிநேர கண்காணிப்பில் உள்ள சிறைகள் social distancingற்கு உகந்த இடமல்ல. அவர்களை தமது வீடுகளில் இருக்க அனுமதியுங்கள்.’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனா சிகிச்சை: 'மருத்துவர்களைவிட செவிலியர்களுக்கு அதிக ஆபத்து