Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருத்தணி முருகனுக்கு அரோகரா.. நாளைய முதல்வர் எடப்பாடி வாழ்க.. காயத்ரி ரகுராமின் ஆன்மீக அரசியல்..!

Mahendran
புதன், 28 மே 2025 (13:10 IST)
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோவிலில் தங்கத்தேர் பவனியில் கலந்து கொண்ட நடிகை காயத்ரி ரகுராம் உள்ளிட்ட அதிமுகவினர் எடப்பாடி பழனிசாமி வாழ்க என்று கூறி அவருடைய புகைப்படத்தை வைத்துக்கொண்டு வலம் வந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
தங்கத்தேர் பவனியில் அரசியலா என கோவில் நிர்வாகத்தினர்  மற்றும் பக்தர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
 
அதிமுகவை சேர்ந்த நடிகை காயத்ரி ரகுராம், முன்னாள் எம்எல்ஏ உள்பட சிலர் தங்கதேர் வரும்போது தேரின் முன்பகுதியை ஆக்கிரமித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் உருவத்தை கையில் வைத்து கொண்டு நாளைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்க என கோசமிட்டனர்..
 
இதனால் பக்தர்கள் அதிருப்தி அடைந்து ’இது என்ன ஆன்மீக நிகழ்ச்சியா அல்லது அரசியல் நிகழ்ச்சியா? இங்கே வந்து எதற்காக அரசியல் செய்கிறீர்கள் ? முருகன் தேரில் வரும் போது எடப்பாடி பழனிச்சாமி வாழ்க என ஏன் கூறுகிறீர்கள் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

மதவாத சக்திகளுடன் அதிமுக?! திமுகவில் இணைந்த மற்றொரு அதிமுக பிரபலம்!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. 28 பேர் கொண்ட கேரளா குழுவை காணவில்லை.. உறவினர்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments