ரஜினியின் பிறப்பையே மாற்றிய அர்ஜூன் சம்பத்!

Webdunia
செவ்வாய், 11 ஆகஸ்ட் 2020 (16:44 IST)
ரஜினிகாந்த் கிருஷ்ணகிரி மண்ணின் மைந்தன் என இந்து மக்கள் கட்சி அர்ஜூன் சம்பத் பேட்டியளித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
சமீபத்தில் இந்து மக்கள் கட்சி அர்ஜூன் சம்பத், ரஜினிகாந்த் கிருஷ்ணகிரி மண்ணின் மைந்தன். ஒசூர் மாவட்டத்தில் உள்ள நாச்சிகுப்பத்தில் பிறந்தவர். ரஜினிகாந்த் ஆன்மீக அரசியல் கொள்கைகளை முன்நிறுத்துவதால் அவரை தமிழர் இல்லை எனக் கூறி வருகிறார்கள். 
 
ரஜினி ஆன்மீக அரசியல் கொள்கைகள் தமிழகத்தில் உள்ள இரண்டு திராவிட இயக்கங்களையும் வீழ்த்தி சிஸ்டத்தை சரி செய்யும். நிச்சயமாக ரஜினி தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை உருவாக்குவார். 
 
தமிழகத்தில் வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் ஆன்மீக அரசியலா, திராவிட அரசியலா என்ற போட்டி இருக்கும். இது ரஜினிகாந்தின் அறைகூவல். ரஜினி தன்னுடைய பிரச்சாரத்தை திட்டமிட்டுள்ளார். 
 
ரஜினியின் பிரச்சாரம் மக்கள் மத்தியில் ஒரு எழுச்சி, புரட்சியை கொண்டு வரும். அப்போது திராவிட இருள் மற்றும் திராவிட மாயையிலிருந்து தமிழகத்தை ஆன்மீக அரசியல் மீட்கும் என பேட்டியளித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு கோடிக்கும் அதிகமான அரசு வேலைகள்.. பிஹார் தேர்தலுக்காக NDA கூட்டணியின் முக்கிய வாக்குறுதிகள்!

தமிழக மக்களை குறிப்பிட்டதாக மடைமாற்ற முயற்சிப்பது முதலமைச்சர் பதவிக்கே அவமானம்.. அண்ணாமலை

தங்கம், வெள்ளி விலை இன்று உயர்வா? சரிவா? சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

6 அபாயகரமான நாய் இனங்களுக்கு தடை: மீறி வளர்த்தால் நாய்கள் கைப்பற்றப்படும்: அதிரடி சட்டம்..!

பிரதமர் பொறுப்பில் இருக்கிறோம் என்பதையே மோடி அடிக்கடி மறந்து விடுகிறார்: முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments