Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'நீங்கள் நலமா' திட்டம் தொடக்கம்..! புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்.!!

Senthil Velan
புதன், 6 மார்ச் 2024 (13:07 IST)
அரசின் திட்டங்கள் பொதுமக்களை சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் ‘நீங்கள் நலமா என்ற புதிய திட்டத்தை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
 
தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பல்வேறு புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நான் முதல்வன், இல்லம் தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி உள்ளிட்ட பல திட்டங்கள் கொண்டுவரப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
 
பயனாளிகளைத் தொடர்பு கொண்டு நலத்திட்டங்கள் குறித்த கருத்துகளைக் கேட்டறியும் புதுமையான திட்டம்தான் நீங்கள் நலமா என்ற திட்டம்.  தற்போது இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மக்களிடம் திட்டங்கள் சென்று சேர்வதை முறையாக கண்காணிக்க இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
 
நீங்கள் நலமா திட்டத்தில் மாவட்ட ஆட்சியர்கள், அமைச்சர்கள், தலைமை செயலாளர், அனைத்து துறைச் செயலாளர்கள் ஆகியோர் மக்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு கருத்துகளை கேட்டறிவார்கள். 
 
இந்த திட்டத்தின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் நேரடியாக மக்களை தொடர்புகொண்டு அரசின் திட்டங்கள் வந்து சேர்கிறதா உள்ளிட்ட நலத்திட்டங்கள் குறித்து கேட்டறிவார்.

ALSO READ: திமுக கூட்டணியில் நீடிக்குமா மதிமுக.! நாளை அவசர ஆலோசனை..!!

இந்த திட்டத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து பொதுமக்களை தொடர்பு கொண்டு, அரசின் திட்டங்கள் வந்து சேர்கிறதா என்பது குறித்து முதல்வர் கேட்டறிந்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வேலைநிறுத்தம் செய்யும் மருத்துவர்களின் கோரிக்கைகள்.. அமைச்சர் மா சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை..!

டாக்டர்களுக்கும், நோயாளிகளுக்கும் சரியான புரிதல் இருக்க வேண்டும்: தமிழிசை

மருத்துவர்கள் தாக்கப்படும்போது நடவடிக்கை எடுக்காததால் இன்னொரு சம்பவம்: அண்ணாமலை

புல்டோசர் வழக்கு: சொத்துகளை இடிக்கவழிக்காட்டு நெறிமுறைகள்.. உச்சநீதிமன்றம் தீர்ப்பு..!

விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.. மருத்துவர் கத்திக்குத்து சம்பவம் குறித்து ஈபிஎஸ்..

அடுத்த கட்டுரையில்
Show comments