Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எங்களுக்கே இலவசம் இல்லையா.? அரசு பேருந்துகளுக்கு அபராதம் விதித்த போக்குவரத்து போலீசார்..!

Fine Bus

Senthil Velan

, வியாழன், 23 மே 2024 (18:16 IST)
சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே அருகே ' நோ பார்க்கிங்' பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 22 அரசு பேருந்துகளுக்கு அபராதம் விதித்து போக்குவரத்து போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.
 
பணி நிமித்தமாக நாங்குநேரி வந்த காவலர் ஒருவர், அரசு பேருந்தில் டிக்கெட் எடுக்க மறுத்தார். மேலும் டிக்கெட் எடுக்க சொன்ன பேருந்தின் நடத்துனரிடம் அந்த காவலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.  டிக்கெட் எடுக்க முடியாது என கூறி அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
 
காவலர்கள் சீருடையில் நீதிமன்றம் உள்ளிட்ட நீண்ட துாரம் செல்லும் போது, சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் வாரன்ட் கடிதத்துடன் செல்ல வேண்டும்' என்பதும் உத்தரவாக உள்ளது. எனவே, நேற்றைய சம்பவம், போக்குவரத்து துறைக்கும், போலீசாருக்கும் இடையே பெரிய அளவில் விரிசலை ஏற்படுத்தி உள்ளது.
 
இந்நிலையில், சென்னை- புதுச்சேரி பேருந்து தாம்பரத்தில் நோ பார்க்கிங்' பகுதியில் நிறுத்தி பயணிகளை ஏற்றியதற்காக, தாம்பரம் போக்குவரத்து போலீசார் ரூ.1000 அபராதம் விதித்தனர்.


சென்னையில் 'நோ பார்க்கிங்ல் நிறுத்தப்பட்டிருந்த 22 அரசுப் பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. திடீரென அரசு பேருந்துகளுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதிக்கப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று வெளியாகும் Xiaomi Poco F6 மொபைல் என்னென்ன அம்சங்களில் வருது?.