Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழக முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு முடிவுகள் எப்போது? தேர்வுத்துறை அறிவிப்பு..!

Advertiesment
தமிழக முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு முடிவுகள் எப்போது? தேர்வுத்துறை அறிவிப்பு..!
, புதன், 29 நவம்பர் 2023 (07:39 IST)
11ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தமிழக முதலமைச்சரின் திறனாய்வு தேர்வு சமீபத்தில் எழுதிய நிலையில் இந்த தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதி குறித்த அறிவிப்பை அரசு தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது

தமிழக அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் படிக்கும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் மொழி இலக்கிய திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வில் வெற்றி பெறும் மாணவர்கள் 1500 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ஊக்கத்தொகை அளிக்கப்படும்.

கடந்த அக்டோபர் 15ஆம் தேதி நடந்த இந்த திறனாய்வு தேர்வில் 2 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் எழுதினர். இந்த நிலையில் இந்த திறனாய்வு தேர்வு முடிவுகள்  டிசம்பர் 1ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

http://www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் திறனாய்வு தேர்வு முடிவுகளை பார்க்கலாம் என்றும் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என்றும் அரசு தேர்வுகள் துறை தெரிவித்துள்ளது.

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீட்புக்குழுவினர்களுக்கும், நிபுணர்களுக்கும் நான் தலைவணங்குகிறேன்: பிரதமர் மோடி..!