Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடுகிறாரா திருநங்கை அப்சரா ரெட்டி?

Webdunia
திங்கள், 1 மார்ச் 2021 (13:46 IST)
திமுக தலைவர் மு க ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவரை எதிர்த்து பாஜகவில் அண்ணாமலை போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் அதிமுக வேட்பாளராக திருநங்கை அப்சரா ரெட்டி ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட வாய்ப்பு இருப்பதாக சற்றுமுன் தகவல் வெளிவந்துள்ளது. காங்கிரஸ் கட்சியில் இருந்து சமீபத்தில் விலகி அதிமுகவில் இணைந்த திருநங்கை அப்சரா ரெட்டி சட்டசபை தேர்தலில் போட்டியிட அதிமுகவில் விருப்ப மனு அளித்துள்ளார்
 
கொளத்தூர் தொகுதியில் போட்டியிட விருப்பம் என்று அவர் அப்சரா ரெட்டி விருப்பமனு அளித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கொளத்தூர் தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட முக ஸ்டாலினை எதிர்த்து அண்ணாமலை போட்டியிடுவார் என்று கூறப்படும் நிலையில் தற்போது அதிமுக சார்பாக அப்சரா ரெட்டி விருப்ப மனு அளித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட போவதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments