Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எம்.ஜி.ஆர். அரசு திரைப்படக் கல்லூரியில் பயில விண்ணப்பிக்கலாம்...

எம்.ஜி.ஆர். அரசு திரைப்படக் கல்லூரியில் பயில விண்ணப்பிக்கலாம்...
, செவ்வாய், 12 ஜூலை 2016 (18:11 IST)
எம்.ஜி.ஆர். அரசு திரைப்படக் கல்லூரியில் தொழில்நுட்பங்களுக்கான பட்டப்படிப்புகள் பயில்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 

 
எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக, சென்னை தரமணியில் தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் கீழ் இயங்கி வருகின்றது.
 
எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் தற்போது கற்பிக்கப்பட்டு வரும் திரைத் தொழில்நுட்பங்களுக்கான பட்டயப் படிப்புகள் இனி, பட்டப்படிப்புகளாக மேம்படுத்தப்படும் என்ற அறிவிப்பு சட்டப்பேரவையில் வெளியிடப்பட்டது.
 
அதனைத் தொடர்ந்து, எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம், தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பெற்று 2016-2017 கல்வியாண்டு முதல் நான்காண்டு கால இளங்கலை - காட்சிக்கலை என்னும் பட்டப் படிப்புகளை கீழ்க்கண்ட பிரிவுகளில் பயிற்றுவிக்கவுள்ளது.
 
2016-2017ஆம் கல்வியாண்டின் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன:
 
1) இளங்கலை - காட்சிக்கலை (ஒளிப்பதிவு)
2) இளங்கலை - காட்சிக்கலை (எண்மிய இடைநிலை)
3) இளங்கலை - காட்சிக்கலை (ஒலிப்பதிவு)
4) இளங்கலை - காட்சிக்கலை (இயக்குதல் மற்றும் திரைக்கதை எழுதுதல்)
5) இளங்கலை - காட்சிக்கலை (படத்தொகுப்பு)
6) இளங்கலை - காட்சிக்கலை ( உயிர்ப்பூட்டல் மற்றும் காட்சிப்பயன்)
 
மேற்குறிப்பிட்ட பாடப் பிரிவுகளில் சேர்ந்து, கலைத்துறையில் தங்களின் கலை ஆர்வத்தை வளர்த்துக் கொள்ள விரும்பும் மாணவ / மாணவியர், இதற்கான விண்ணப்பப் படிவங்களை தமிழக அரசின் http://www.tn.gov.in/miscellaneous/mgrinstitute.html என்ற இணையதள முகவரியில் 12.07.2016-இல் இருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என்று எம்.ஜி.ஆர் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன முதல்வர் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இங்கிலாந்து பிரதமர் பெயர் குழப்பத்தால் வந்த பிரச்சனை : ஆபாச நடிகைக்கு குவிந்த வாழ்த்துக்கள்