Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பி.எட் விண்ணப்ப படிவங்கள்: ஆகஸ்ட் 1 முதல் வினியோகம்

பி.எட் விண்ணப்ப படிவங்கள்: ஆகஸ்ட் 1 வினியோகம்

பி.எட் விண்ணப்ப படிவங்கள்: ஆகஸ்ட் 1 முதல் வினியோகம்
, வியாழன், 28 ஜூலை 2016 (13:32 IST)
நடப்பு ஆண்டுக்கான பி.எட் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 1-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை வினியோகிக்கப்பட உள்ளன.



தமிழகம் முழுவதும் உள்ள 21 அரசு, அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள 1777 அரசு பி.எட் ஒதுக்கீட்டு இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை விலிங்ஸ்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் நடத்தி வருகிறது.

இதுகுறித்து நிறுவனத்தின் முதல்வர் தில்லை நாயகி, பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்பிக்க ஆகஸ்டு 10-ந்தேதி கடைசி நாளாகும். தபால் மூலம் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 10-ந் தேதி மாலை 5 மணிக்குள் வந்து சேர வேண்டும். இதற்கான அறிவிப்பு ஓரிரு நாட்களில் www. ladywillingdoniase.com என்ற கல்லூரி இணையதளத்தில் வெளியிடப்படும் என்றார்.

இதை தவிர, பி.எட் கலந்தாய்வுக்கான விண்ணப்பகட்டணம் ரூ.300-ல் இருந்து ரூ.500 ஆக உயர்ந்துள்ளது. எஸ்.சி, எஸ்.டி பிரிவு மாணவர்களுக்கு ரூ.250 விண்ணப்ப கட்டணம் வசூலிக்கப்படும். பி.இ. பட்டதாரிகளும் பி.எட் படிப்பில் சேர்ந்து படிக்கலாம். இந்த வருடம் 220 முதல் 240 இடங்கள் பொறியியல் படித்த மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்டு 3-வது வாரத்தில் சேர்க்கையை தொடங்கி ஆகஸ்டு 31-ந் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதலாம் ஆண்டு வகுப்புகள் செப்டம்பர் முதல் வாரத்தில் தொடங்கலாம் என செய்திகள் வந்துள்ளன.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாலாற்றின் துணை ஆற்றில் மேலும் ஓர் அணை : அரசு வேடிக்கைப் பார்ப்பது ஏன்? : ராமதாஸ் கேள்வி