தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் சீரமைப்பு பணிகள் முடிவடைந்து குடமுழுக்கு செய்வதில் விவகாரம் ஏற்பட்டுள்ள நிலையில் குடமுழுக்கு நடத்த தடை கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவிலில் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என பல தமிழ் அமைப்புகள் போராடி வருகின்றனர். ஆனால் ஆண்டாண்டுகாலமாக ஆகம விதிகளின் படியே குடமுழுக்கு நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் வழக்கறிஞர் சரவணன் என்பவர், தொல்லியல் துறையின் அனுமதி பெறாமல் குடமுழுக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது எனவும், புராதான தொல்லியல் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள பெரிய கோவிலில் குடமுழுக்கு நடத்த முறையான அனுமதி பெறவில்லை எனவும் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் முறையீடு தாக்கல் செய்துள்ளார். மனுவாக தாக்கல் செய்தால் நாளையே விசாரிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.