Webdunia - Bharat's app for daily news and videos

Install App

31ஆம் தேதி கட்சி அறிவிப்பு இல்லை: ரஜினியை டிஸ்சார்ஜ் செய்த மருத்துவர்களின் நிபந்தனைகள்!

Webdunia
ஞாயிறு, 27 டிசம்பர் 2020 (16:01 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த 25ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு ரத்த அழுத்தத்தில் மாறுபாடு இருந்ததால் அதற்கான சிகிச்சைகள் வழங்கப்பட்டன 
 
இந்த நிலையில் இன்று ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று செய்திகள் வெளியான நிலையில் சற்று முன் அவரது உடல்நிலை குறித்த அறிக்கை ஒன்றை அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ளது
 
இந்த அறிக்கையில் ரஜினிகாந்த் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவரது ரத்த அழுத்தம் சரியான நிலையில் இருப்பதாகவும் இன்று அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் அவர் ஒரு வாரம் முழு ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்
 
ஒருவாரத்திற்கு ஓய்வு மற்றும் ரத்த அழுத்தத்தை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கொரோனா தொற்று ஏற்படும் சூழல்களிலிருந்து ரஜினிகாந்த் அவர்கள் விலகி இருக்கவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர் 
 
மருத்துவர்களின் இந்த இரண்டு அறிவுறுத்தல் காரணமாக வரும் 31-ஆம் தேதி ரஜினிகாந்த் தனது அரசியல் கட்சி குறித்து அறிவிப்பை வெளியிட மாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

சாமிக்கு ஆரத்தி எடுப்பதில் பூசாரிகளுக்குள் சண்டை.. கத்திக்குத்தால் ஒருவர் கொலை..!

கோடையில் மின்வெட்டு வராது.. அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதிமொழி..!

தமிழ்நாட்டில் தினமும் 5 கொலைகள்: இது தான் திராவிட மாடல் ஆட்சியின் லட்சணமா? அன்புமணி

தொகுதி மறுசீரமைப்பு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.. தமிழக அரசின் அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments