Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜெ. அப்போதே இறந்துவிட்டார் ; அப்பல்லோ மருத்துவர் தகவல் - பேஸ்புக்கில் பரபரப்பு

ஜெ. அப்போதே இறந்துவிட்டார் ; அப்பல்லோ மருத்துவர் தகவல் - பேஸ்புக்கில் பரபரப்பு
, திங்கள், 9 ஜனவரி 2017 (09:58 IST)
மறைந்த முதல்வர் ஜெ.வின் மரணத்தில் ஏராளமான மர்மங்கள் அடங்கியிருப்பதாக பொதுமக்கள் சந்தேகத்தில் இருக்கிறார்கள். இது தொடர்பாக பல்வேறு வழக்குகளும் நீதிமன்றத்தில் தொடரப்பட்டன. நீதிபதி ஒருவரும் அதே சந்தேகத்தை கிளப்பினார்.


 

 
இந்நிலையில் ஃபேஸ்புக்கில் சிலர் சில தகவல்களை பதிவிட்டு வருகின்றனர். பாஜக கட்சியை சேர்ந்த பாலசுப்ரமணிய ஆதித்யன் என்பவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் ஒரு தகவலை பதிவு செய்துள்ளார். அதில் குறிப்பிட்டுள்ளதாவது:
 
முழு பூசணிக்காயை சோத்துல மறைக்கவெல்லாம் முடியாது!.....அதிர்ச்சி தகவல் !....
 
எனது தோழியின் நண்பரும் அப்பல்லோ மருத்துவமனையில் பகுதி நேரமாக பணிபுரியும் specialist டாக்டர் அம்மாவின் அப்பல்லோ சிகிச்சையை நேரில் கண்டவர் கூறிய வாக்குமூலம்:
 
அம்மா 22 sept 2016 அன்றே நாங்கள் இரவில் ஆஸ்பத்திரி வரும்போதே இறந்துதான் இருந்தார். இதை வெளியில் சொன்னால் எங்கள் வேலை பறி போகும் என அப்பல்லோ ஆஸ்பத்திரி ரெட்டி நிர்வாகம் மிரட்டியது. சசிகலா அடியாட்கள் எங்கள் குடும்பத்தை கொன்று விடுவதாகவும் மிரட்டினர். நாங்களும் சாதாரண மனிதர்கள்தானே எங்களுக்கும் உயிர் பயம் உண்டுதானே. எனவே இந்த உண்மையை நாங்கள் கண்ணீருடன் மறைக்க வேண்டியதாகி விட்டது. ஆனாலும் மனம் பொறுக்கவில்லை.

webdunia

 

 
இப்போது மக்கள் கோபத்தில் எல்லா இடத்திலும் கேள்வி கேட்பதால் நாங்கள் உண்மை கூற தயாராக உள்ளோம். ஆனால் ஊடகங்கள் எங்களை பேட்டி எடுத்து உண்மையை வெளியிட மறுக்கின்றன. நான் ஏழையாக இருந்த சிறுவயதில் எனக்கு பொருள் உதவி செய்து என்னை இந்த டாக்டர் படிப்பை படிக்க வைத்த புரட்சிதலைவர் MGR ன் உப்பை தின்றவன் என்கின்ற முறையில் இந்த உண்மையை உலகிற்கு தெரியப் படுத்தி விட்டேன். என் உயிருக்கு ஆபத்து வந்தாலும் அம்மாவின் பிள்ளைகள் என் குடும்பத்தை காப்பாற்றுவீர்கள்.
 
இப்படி பதிவுகள் வருகிறது. என்ன மேக் அப் போட்டாலும் உண்மை தூங்க விடாது போல இருக்கே!!.பல நாள் திருடன் ஒரு நாள் சிறையில் உண்மைதான் போல” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இதுவரை ஜெ.வின் மரணத்தை பற்றி சமூக வலைத்தளங்களில் பல்வேறு தகவல்கள் வந்தாலும், முதல் முறையாக ஒரு அப்பல்லோ மருத்துவரின் பெயர், முகவரி உள்ளிட்ட முழு விபரத்தோடு இந்த பதிவு வெளியாகியுள்ள விவாகாரம் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்துபவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தீபா ஆதரவாளர்கள் புதிய கட்சி தொடக்கம்; கொடி, சின்னம் அறிமுகம்