ஜெயலலிதாவுக்கு ஏற்பட்டது மாரடைப்புதான்..! – அப்பல்லோ மருத்துவர் வாக்குமூலம்!

Webdunia
செவ்வாய், 8 மார்ச் 2022 (13:33 IST)
ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணையில் அவருக்கு ஏற்பட்டது மாரடைப்புதான் என அப்பல்லோ மருத்துவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நல குறைவால் கடந்த 2016ம் ஆண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளதாக சர்ச்சை எழுந்த நிலையில் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக இந்த ஆணையம் எந்த விசாரணையும் மேற்கொள்ளாமல் இருந்த நிலையில் நேற்று முதல் மீண்டும் விசாரணையை தொடங்கியுள்ளது.

நேற்று அப்பல்லோ மருத்துவர் ஒருவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ஜெயலலிதாவுக்கு ஏற்கனவே உடல்நலக் கோளாறுகள் இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார், அதை தொடர்ந்து இன்று அப்பல்லோ மருத்துவர் மதன் குமாரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் 2016 டிசம்பர் 4ம் தேதி ஜெயலலிதாவுக்கு ஏற்பட்டது மாரடைப்புதான் என அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அதிமுக பிரமுகர்களிடமும் அடுத்த கட்டமாக விசாரணை நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வந்தே பாரத் ரயில் மோதி 2 மாணவர்கள் பரிதாப பலி.. விபத்தா? தற்கொலையா?

26 வயது விமான பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 60 வயது விமானி.. காவல்துறை வழக்குப்பதிவு..!

100 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்.. 4 ஐயப்ப பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பலி..!

பணியிட மாறுதல் அச்சம்: முதல்வர் தொகுதியில் பெண் அதிகாரி தற்கொலை முயற்சி..!

அமமுக இடம்பெறும் கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும்: டிடிவி தினகரன்

அடுத்த கட்டுரையில்
Show comments