"மோசடி மன்னன்" அப்ரோ யேசுதாஸ் மீண்டும் கைது
"மோசடி மன்னன்" அப்ரோ யேசுதாஸ் மீண்டும் கைது
மகளிர் சுய உதவிக்குழுவினரிடம் மோசடி செய்ததாக கூறி, மோசடி மன்னன் அப்ரோ யேசுதாஸ் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
சென்னை மற்றும் தமிழகம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில், வட்டியில்லாமல் கடன் பெற்றுத்தருவதாக கூறி சுமார் 10000 பேரிடம் பண மோசடி செய்யதாக புகார் எழுந்தது.
இதனையடுத்து, மோசடி மன்னன் அப்ரோ யேசுதாஸை சென்னை கொளத்தூரில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் மீண்டும் கைது செய்தனர்.
அப்ரோ யேசுதாஸை அரசியல் காரணங்களுக்காக போலீசார் கைது செய்துள்ளதாக அப்ரோ யேசுதாஸ் தரப்பினர் குற்றம் சாட்டுகின்றனர்.