சசிகலா எடுக்கும் முடிவில் அரசியல் மாற்றம் நிகழும்... அன்வர் ராஜா!

Webdunia
சனி, 19 செப்டம்பர் 2020 (08:43 IST)
சசிகலா எடுக்கும் முடிவை பொறுத்து தமிழ்நாட்டில் அரசியல் மாற்றம் நிகழும் என அன்வர் ராஜா கருத்து. 
 
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா வரும் ஜனவரி 27 ஆம் ஆண்டு விடுதலை ஆவார் என்று ஆர்டிஐ தகவல் வெளிவந்துள்ளது. 
 
ஆனால் அதே நேரத்தில் அவருக்கு விதிக்கப்பட்டிருக்கும் ரூபாய் 10 கோடி அபராதத் தொகையை அவர் செலுத்தாவிட்டால் மேலும் ஒரு ஆண்டு ஜெயில் தண்டனை அனுபவிக்க நேரிடும் என்றும் அந்த தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் தனக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை செலுத்த அனுமதி கோரி சசிகலா மனு தாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. எனவே சசிகலா விரைவில் வெளியே வருவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 
 
அப்படி சசிகலா வெளியே வந்தால் அதிமுகவிற்கு பெரிய சிக்கல் ஏற்படும் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. ஆனால், அதிமுக தரப்பினர் சசிகலா வரவால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என அமைச்சர்கள் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே தற்போது இதற்கு மாற்று கருத்து ஒன்று வெளியாகியுள்ளது. 
 
ஆம், பாஜகவுடன் அதிமுக கூட்டணி, குடியுரிமை திருத்தச் சட்ட எதிப்பு, எம்.பி., பதவி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் தற்போதைய அதிமுக இரட்டை தலைமை மீது அதிருப்தியில் இருக்கும் அன்வர் ராஜா, சசிகலா வெளியே வந்து அவர்கள் எடுக்கும் முடிவை பொறுத்து தமிழ்நாட்டில் அரசியல் மாற்றம் நிகழும் என்றும் அதிமுக மீதும் இந்த தாக்கம் இருக்கும் என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மிளகாய் பொடி தூவி நகைக்கடையில் கொள்ளையடிக்க முயற்சித்த பெண்.. அதன்பின் நடந்த ட்விஸ்ட்..!

சகோதரர் மருத்துவமனையில் அனுமதி!.. பெங்களூர் பறக்கும் ரஜினிகாந்த்!...

பிறந்தநாளன்று தன்னை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொண்ட காவலர்!.. வேலூரில் சோகம்...

பிகார் பெண் எம்.பி. இரண்டு முறை வாக்களித்தாரா? இரு கைகளிலும் மை இருந்ததால் சர்ச்சை..!

8க்கும் மேற்பட்ட தெருநாய்கள் கடித்து குதறியதால் 6 ஆடுகள் பலி.. நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments