Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாராட்டக்கூட மனம் இல்லாதவர் கமல்ஹாசன். அமைச்சர் கடம்பூர் ராஜூ

Advertiesment
kamalhassan
, திங்கள், 17 ஜூலை 2017 (01:45 IST)
உலக நாயகன் கமல்ஹாசன் தமிழக அரசை கடுமையாக விமர்சனம் செய்ததற்கு தமிழக அமைச்சர்கள் பதிலடி கொடுத்து வரும் நிலையில் சற்று முன் இன்னொரு தமிழக அமைச்சர் கமல்ஹாசன் மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்படும் என்று கூறியுள்ளார்



 
 
நடிகர் கமல்ஹாசன் தமிழ்நாட்டில் அரசு துறைகள் அனைத்தும் கெட்டு போய்விட்டது என்று கூறியுள்ளார். தொடர்ந்து இவ்வாறு அவர் அவதூறு தெரிவித்து கருத்து தெரிவித்தால் அரசு சார்பில் அவர் மீது வழக்கு தொடரப்படும். 
 
தமிழக அரசு திரைப்பட நடிகர் மற்றும் சின்னத்திரை நடிகர்களுக்காக விருது வழங்கி கவுரவித்து உள்ளது. திரைப்படத்துறையினர் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து நன்றி தெரிவித்தனர். ஆனால் கமல்ஹாசன் பாராட்டக்கூட மனம் இல்லாதவர். அவரைப்பற்றி கூற விரும்பவில்லை' என்று கடம்பூர் ராஜூ மேலும் கூறியுள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கமல்ஹாசன் முதலில் இதை செய்யட்டும்! தமிழிசை செளந்திரராஜன் காட்டம்