சசிகலா வரிசையான முன்னாள் அதிமுக நிர்வாகிகளிடம் பேசும் ஆடியோக்கள் வெளியாகி வருகின்றன.
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியடைந்த நிலையில் எதிர்கட்சியாக உள்ளது. எனினும் அதிமுகவில் ஈபிஎஸ் – ஓபிஎஸ் இடையே உட்கட்சி பூசல் எழுந்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசிக் கொள்ளப்படுகிறது. இதனால் கட்சி சிதறும் நிலை ஏற்பட்டுள்ளதாக பேசிக் கொள்ளப்படும் நிலையில் கட்சியை காப்பாற்றா தான் வருவதாய் சசிகலா பேசியுள்ளதாக வெளியாகியுள்ள ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இது போல ஒரு ஆடியோவில் அழுது புலம்பிய தொண்டரிடம் தான் மீண்டும் அரசியலுக்கு வருவேன் என சசிகலா உறுதி அளித்திருந்தார். இந்நிலையில் இப்போது புதிதாக ஒரு ஆடியோ வெளியாகியுள்ளது.
அதில் திருச்சியை சேர்ந்த அதிமுக நிர்வாகி அருள்ஜோதி என்பவர் மீண்டும் சசிகலா அதிமுகவுக்கு வரவேண்டும் எனக் கோரிக்கை வைக்க, அதற்கு சசிகலா நிச்சயம் வருவேன். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போல் கட்சியை நடத்துவோம். கூடிய சீக்கிரமே எல்லாம் சரியாகி விடும் என நம்பிக்கை அளித்துப் பேசியுள்ளார்.