Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்தடுத்து தொடர் மழை; புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! – வானிலை ஆய்வு மையம்!

Webdunia
ஞாயிறு, 9 ஆகஸ்ட் 2020 (09:27 IST)
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

கடந்த வாரங்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வந்த நிலையில் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதனால் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கேரளா மற்றும் கர்நாடகாவின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் தற்போது வங்கக்கடலில் மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் இன்னும் இரண்டு நாட்களுக்கு மலைத்தொடர் மாவட்டங்கள் உள்ளிட்ட சில மாவட்டங்களிலும், கேரளா, கர்நாடகா பகுதிகளிலும் மழை நீடிக்கும் என கூறப்பட்டுள்ளது. மேலும் மீனவர்கள் கடலுக்குள் செல்வதை தவிர்க்கவும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போட்டோக்களை வீடியோவாக மாற்றித்தரும் கூகுள் AI.. முற்றிலும் இலவசம்..!

கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவர் மனைவி மறுமணம்.. துருக்கிக்கு போலி பாஸ்போர்ட்டில் சென்றாரா?

பெண்கள் உதவி திட்டத்தில் பணம் பெற்ற 14000 ஆண்கள்! - மகாராஷ்டிராவில் அதிர்ச்சி சம்பவம்!

வெள்ளத்தில் மீட்கப்பட்ட யாரும் குழந்தையை தத்தெடுத்தது மாநில அரசு.. அதிரடி அறிவிப்பு..!

பள்ளியில் படிக்கும்போதே உதவித்தொகை! மாணவர்களுக்கு உதவும் Scholarship தேர்வுகள்!

அடுத்த கட்டுரையில்
Show comments