Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாரதியார் பல்கலைக்கழக பணி நியமன ஊழல் வழக்கில் மேலும் ஒருவர் மீது வழக்குப் பதிவு

Advertiesment
பாரதியார் பல்கலைக்கழக பணி நியமன ஊழல் வழக்கில் மேலும் ஒருவர் மீது வழக்குப் பதிவு
, ஞாயிறு, 4 பிப்ரவரி 2018 (12:22 IST)
பாரதியார் பல்கலைக்கழக பேராசிரியர் பணி நியமன ஊழல் வழக்கில்,  சந்தேகத்தின் பேரில் பாரதியார் பல்கலைக்கழக தொலைதூர பொறுப்பு இயக்குநர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக பணிபுரிந்து வருபவர் கணபதி. இவர், உதவி பேராசிரியர் பணி நியமனத்திற்கு தன்னிடம் ரூ.30 லட்சம் லஞ்சம் கேட்டார். எனவும் அதில் ஒரு லட்சத்தை ரொக்கமாகவும், மீதி ரூ.29 லட்சத்தை காசோலையாகவும் கணபதியிடம் கொடுத்ததாக சுரேஷ் என்பவர் லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் புகார் அளித்தார்.
 
அதைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நேற்று காலை பாரதியார் பல்கலைக்கழகத்தில் திடீர் சோதனை நடத்தினார். மேலும், கணபதியின் அலுவலகம் மற்றும் பல்கலைக்கழகம் அருகே மருதமலை அடிவாரத்தில் உள்ள அவரின் வீடு ஆகிய இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. சோதனையில் ஏராளமான சொத்து ஆவணங்கள் கைப்பற்றப் பட்டன.
 
இதனையடுத்து லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக துணைவேந்தர் கணபதியை போலீசார் நேற்று கைது செய்தனர். இந்நிலையில் தற்பொழுது இந்த வழக்கில் தொடர்பு இருப்பதாக பாரதியார் பல்கலைக்கழக தொலைதூர பொறுப்பு இயக்குநர் மதிவாணன் மீது, சந்தேகத்தின் பேரில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். மதிவாணன், கைது செய்யப்பட்ட பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதியின் உறவினர் ஆவார். மதிவாணனிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.  

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விண்வெளியில் அதிக நேரம் நடந்து சாதனை படைத்த் ரஷ்ய வீரர்கள்