சரத்குமார் எண்ணிலிருந்து சரத்குமாருக்கு வந்த அழைப்பு! – அதிர்ச்சியான சரத்குமார்!

Webdunia
வியாழன், 30 ஜூலை 2020 (12:28 IST)
நடிகர் சரத்குமாருக்கு அவரது எண்ணிலிருந்தே ஒருவர் அழைத்து பேசியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமா நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் சரத்குமார் எண்ணையே காட்டியுள்ளது. அதை எடுத்து பேசியபோது கோயம்புத்தூரை சேர்ந்த சாஃப்ட்வேர் இஞ்சினீயர் என ஒருவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார்.

எவ்வாறு தனது நம்பரிலிருந்தே போன் செய்கிறீர்கள் என சரத்குமார் கேட்க, அதற்கு அந்த நபர் ஒரு சாஃப்ட்வேர் மூலமாக அவ்வாறு செய்வதாக கூறியுள்ளார். இதுகுறித்து சரத்குமார் போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார். சம்பந்தபட்ட நபரின் செல்போன் எண் சரத்குமார் போனில் பதிவாகவில்லை என்றும், அதற்கு பதிலாக சரத்குமார் எண்ணே பதிவாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாயை சுட்டெரிக்கும் வெயிலில் கட்டிப்போட்ட உரிமையாளர்: ரூ.1,050 அபராதம் விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ஓட்டு போட சொல்லி அடம்பிடிங்க!. குழந்தைகளிடம் சொன்ன விஜய்க்கு எதிராக வழக்கு..

அரவிந்த் கெஜ்ரிவால் குண்டர்களை வைத்து என்னை அடித்தார்.. பெண் எம்பியின் பகீர் குற்றச்சாட்டு..!

300 ருபாய் லஞ்சம்.. செல்போன் பயன்படுத்தி காப்பியடித்து தேர்வு எழுதிய மாணவர்கள்.. தீவிர விசாரணை

கல்யாணம் பண்ணாமலேயே குழந்தை!.. சத்யராஜ் பொண்ணு திவ்யா வேறலெவல்!...

அடுத்த கட்டுரையில்
Show comments