கீழக்கரை ஜல்லிக்கட்டு மைதானத்தில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க முன்பதிவு அறிவிப்பு!

Sinoj
வியாழன், 18 ஜனவரி 2024 (20:47 IST)
தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கலை முன்னிட்டு மதுரை அலங்கா நல்லூர், பாலமேடு, புதுக்கோட்டை வன்னியவிடுதி ஆகிய இடங்களில்   ஜல்லிக்கட்டு போட்டி நடந்தப்பட்டது. 

இந்த நிலையில், மதுரையில் உள்ள கீழக்கரையில் ஏறுதழுவுதல் அரங்கம் கட்டப்பட்ட நிலையில் வரும் 24 ஆம் தேதி திறக்கப்படவுள்ளது. அப்போது மைதானத்தில் நடைபெறும் போட்டியில்,  பங்கேற்க மாடுபிடி வீரர்கள், காளைகளின் உரிமையாளர்கள் முன்பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
மதுரையில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு மைதானத்தில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க மாடுபிடி வீரர்கள், காளைகளின் உரிமையாளர்கள் முன்பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி நாளை ( ஜனவரி 19) பிற்பகல்12 மணி முதல் நாளை மறுநாள் பிற்பகல் 12 மணிவரை Madurai.nic.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

"கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை" வரும் 24-ஆம் நாள் திறந்து வைத்து போட்டிகளைக் காண மதுரை, அலங்காநல்லூர் - கீழக்கரைக்கு வருகிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எந்த ஷா வந்தாலென்ன? கருப்பு சிவப்பு படை தக்க பாடம் புகட்டும்! முதல்வர் ஸ்டாலின்

ஆசைக்கு அளவில்லை என்பதற்கு அடையாளம் விஜய்”: த.வெ.க. தலைவரை விமர்சித்த அமைச்சர் கோவி. செழியன்

விஜய் போட்டாவ வச்சி என் பொண்ணு வாழ்க்கையே போச்சி!.. அட பாவமே!...

இட்லி, வடை, தோசை சாப்பிடுவது போன்ற ஒரு சாதாரண சந்திப்பு.. விஜய் சந்திப்பு குறித்து பிரவீன் சக்கரவர்த்தி

உபியில் 2.45 கோடி வாக்காளர் படிவங்கள் திரும்ப வரவில்லை.. SIRஆல் பாஜகவுக்கு சிக்கலா?

அடுத்த கட்டுரையில்
Show comments