அண்ணாமலையின் ''பாத யாத்திரை தொடக்க நிகழ்ச்சிக்கு'' உணவு தயாரிப்பு பணி மும்மரம்!

Webdunia
வெள்ளி, 28 ஜூலை 2023 (13:05 IST)
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் ‘’என் மண் என் மக்கள்’’ பாதயாத்திரை தொடக்க விழாவில் பங்கேற்க வருபவர்களுக்கு உணவு தயாரிப்பு பணி மும்மரமாக நடந்து வருகிறது.

இன்று மாலை 3 மணிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ராமேஷ்வரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் ‘’என் மண் என் மக்கள்’’  பாத யாத்திரை பயணத்தைத் தொடங்கி வைக்கிறார்.

இந்த யாத்திரையின் தொடக்க விழாவிற்கு என்டிஏ கூட்டணியில் முக்கிய  தலைவர்கள் விருந்தினர்களாக அழைப்பட்ட நிலையில், முன்னாள் முதல்வர் ஓபிஸ் பெயரும் இதில் இருந்ததாகவும் ஆனால், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கொடுத்த அழுத்தத்தால் ஓபிஎஸ் பெயர் கடைசி நேரத்தில் நீக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

யாத்திரை தொடக்கவிழா நிகழ்ச்சியில்  10 ஆயிரம் பேர் பங்கேற்கும் வகையில் பிரமாண்டமாக  தயாராகியுள்ள நிலையில், வரவேற்பு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அண்ணாமலையில் ராமேஸ்வரம் முதல் சென்னை வரை பாதயாத்திரை மேற்கொள்ள நிலையில், யாத்திரை தொடக்க விழாவில் பங்கேற்க வருபவர்களுக்கு உணவு தயாரிப்பு பணி மும்மரமாக நடந்து வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செங்கோட்டையன் பின்னால் இருப்பது திமுக?!... கொளுத்திப்போட்ட நயினார் நாகேந்திரன்!...

அதிமுகவை ஒன்றிணைக்க சொன்னதே பாஜகதான்!.. போட்டு உடைத்த செங்கோட்டையன்!...

நீதிமன்ற அவமதிப்பு மனு.. பதிலளிக்கத் தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

மகாராஷ்டிரா பெண் வழக்கறிஞர் பீகார் தேர்தலில் வாக்களித்தாரா? வைரல் பதிவு..!

மாதம் ரூ.4 லட்சம் ஜீவனாம்சம் போதாது.. கிரிக்கெட் வீரர் ஷமியின் மனைவி மனுதாக்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments