அதிமுக பொன்விழா கொண்டாட்டம்: பாஜக அண்ணாமலை வாழ்த்து!

Webdunia
ஞாயிறு, 17 அக்டோபர் 2021 (11:47 IST)
அதிமுக ஆரம்பித்து 50 ஆண்டுகள் ஆனதை அடுத்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் இன்று பொன்விழா கொண்டாட்டங்கள் கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
அதிமுக 50வது ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக கொடியை ஓபிஎஸ் இபிஎஸ் இணைந்து ஏற்றினர். அதன்பின் இனிப்புகள் வழங்கி கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பொன்விழா சிறப்பு மலரும் வெளியிடப்பட்டது என்பதும் அந்த மலரை அதிமுகவினர் வாங்கி சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை அவர்கள் தனது டுவிட்டரில் அதிமுகவின் பொன் விழா கொண்டாட்டத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து கூறியிருப்பதாவது: பொன்மனச் செம்மல் உருவாக்கிய அதிமுக பொன்விழாவை தொடங்கும் நாள் இன்று. தொண்டர்கள் பலத்தையும் மக்கள் செல்வாக்கையும் நம்பி 1972ல் தொடக்கம், 1997-ல் நெல்லையில் புரட்சித்தலைவி அமைத்த வெள்ளி விழா.
 
சிறப்பு அழைப்பாளராக பாஜக தேசியத் தலைவர் எல்.கே.அத்வானி அய்யா அவர்கள்! அந்த இரு தலைவர்களின் இருக்கும் பிம்பங்களாக  எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் கண்களைப் போல கழகத்தை காக்க, பல நூற்றாண்டு காலம் தமிழ் போல் வாழ்க என  பாஜக சார்பில் வாழ்த்துகிறேன்!

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏற்ற இறக்கத்தில் பங்குச்சந்தை.. இன்று மீண்டும் சரிவு.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

நவம்பர், டிசம்பரில் வலுவான புயல்கள் உருவாக வாய்ப்பு! - சுயாதீன வானிலை ஆய்வாலர் டெல்டா வெதர்மேன் கணிப்பு!

15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்.. நீதிமன்ற விசாரணை நடந்து கொண்டிருந்தபோதே குழந்தை பெற்றதால் அதிர்ச்சி..!

எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தியும் பயனில்லை.. டிஜிட்டல் அரேஸ்ட்டில் ரூ.50 லட்சம் ஏமாந்த முதிய தம்பதி..!

சூடானில் உள்நாட்டு போர் தீவிரம்.. ராணுவமே சொந்த நாட்டு மக்கள் 460 பேரை கொன்ற கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments