Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கள்ளக்குறிச்சி தீவிபத்து: நேரில் சென்று பார்வையிட்ட அண்ணாமலை!

Advertiesment
கள்ளக்குறிச்சி தீவிபத்து: நேரில் சென்று பார்வையிட்ட அண்ணாமலை!
, புதன், 27 அக்டோபர் 2021 (20:24 IST)
நேற்று இரவு கள்ளக்குறிச்சி அருகே உள்ள சங்கராபுரம் என்ற பகுதியில் பட்டாசு கடை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சம்பவ இடத்திலேயே 6 பேர் பலியாகினர் என்பதும் 9 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சிகிச்சை பெற்றவர்களில் ஒருவர் இன்று மரணமடைந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பட்டாசு வெடி விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு ரூ 5 லட்சம் நிதி உதவி என்ற அறிவிப்பை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சற்று முன்னர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் தீ விபத்து ஏற்பட்ட பட்டாசு கடையை பார்வையிட்டார்.மேலும் இந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு அவர் ஆறுதல் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரும் இந்தியாவின் ஒரு பகுதியாக மாறும்: தளபதி அமித் தேவ்