Publish Date: Tue, 04 Apr 2023 (14:46 IST)
Updated Date: Tue, 04 Apr 2023 (14:48 IST)
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தேர்வு முடிவில் கோளாறு ஏற்பட்டதாக கூறி மாணவர்கள் திடீர் போராட்டம் நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து இந்திய மாணவர் சங்க செயலாளர் அவினேஷ் என்பவர் கூறியபோது, சிதம்பரம் அரசு கலைக் கல்லூரியில் கடந்த வாரம் தேர்வு முடிவுகள் வெளியானது. தேர்வை எழுதிய மாணவர்களில் சிலர், தேர்வு எழுதவில்லை என தேர்வு முடிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், அதேபோல் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு குறைந்தபட்ச அளித்து அரியர் என்று வந்துள்ளதாகவும் கூறினார்..
மேலும் நன்றாக தேர்வு எழுதிய மாணவர்களுக்கு குறைவாக மதிப்பெண் போட்டு, தோல்வி என குறிப்பிட்டு உள்ளதாகவும், கூறியுள்ளார். எனவே தேர்வு முடிவில் உள்ள குளறுபடிகளை சரி செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.