Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அன்புமணியை சந்திக்க தைலாபுரம் வரும் அண்ணாமலை.. இன்னும் சற்று நேரத்தில் ஒப்பந்தம்?

Mahendran
செவ்வாய், 19 மார்ச் 2024 (07:27 IST)
பாரதிய ஜனதா கட்சியில் பாமக கூட்டணி இணைவது 99 சதவீதம் உறுதி செய்யப்பட்டு விட்ட நிலையில் இன்னும் சற்று நேரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் இருக்கும் தைலாபுரம் தோட்டத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வருகை தர இருப்பதாகவும் அவருடன் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் வருகை தர இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
கடந்த சில நாட்களாக நடைபெற்ற கூட்டணி பேச்சு வார்த்தைகள் தற்போது உடன்பாடு ஏற்பட்டு எத்தனை தொகுதிகள் என்பது முடிவு செய்யப்பட்டு விட்டதாகவும் இன்னும் ஒரு சில மணி  நேரத்தில் இரு கட்சிகளும் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 
 
பாஜக கூட்டணியில் பாமக இணைந்து விட்டால் அந்த கூட்டணி வலுவடைந்து விடும் என்றும் ஐந்து தொகுதிகள் வரை வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாகவும் பல தொகுதிகளில் இரண்டாம் இடத்தை பிடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 
 
மேலும் இந்த கூட்டணியில் தேமுதிகவும் இணைந்து விட்டால் திமுகவுக்கு சவால் விடும் வகையில் தமிழகத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் வாக்குகளை பெறும் என்றும் கூறப்படுகிறது. 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓடும் பஸ்ஸில் 19 வயது பெண்ணுக்கு ரகசிய பிரசவம்! குழந்தையை சாலையில் வீசிக் கொன்ற கொடூரம்!

பாஜகவை கூட்டணியில் சேர்த்ததால் ஸ்டாலினுக்கு பயம் வந்துவிட்டது: எடப்பாடி பழனிசாமி

மதுரையில் தவெக மாநில மாநாடு.. தேதியை அறிவித்த விஜய்..!

தமிழகத்தை உலுக்கிய கும்பகோணம் பள்ளி தீ விபத்து! - 21ம் ஆண்டு நினைவஞ்சலி!

அப்படி ஒரு திருக்குறளே இல்லையே..! ஆளுநர் கொடுத்த விருதில் சர்ச்சை! - திரும்ப பெற முடிவு?

அடுத்த கட்டுரையில்
Show comments