Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணாமலை அப்படி பேசக்கூடாது.. திடீரென விஜய்க்கு ஆதரவாக பேசிய சீமான்!

Mahendran
வெள்ளி, 21 மார்ச் 2025 (14:08 IST)
நடிகர் விஜய் சினிமாவில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார். 250 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். அப்படி இருக்கும்போதே அரசியலுக்கு வந்து ஆச்சர்யத்தை கொடுத்திருக்கிறார். தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியை துவங்கி நடத்தி வருகிறார். இந்த கட்சியின் மாநாடு விக்கிரவாண்டி பகுதியில் நடந்தபோது சுமார் 8 லட்சம் விஜய் ரசிகர்கள் கலந்துகொண்டார்கள்.

இந்த விழாவில் விஜய் மிகவும் ஆக்ரோஷமாக பேசி பலரையும் ஆச்சர்யப்படுத்தினார். குறிப்பாக திமுக அரசை மிகவும் கடுமையாக விமர்சித்து பேசினார். 2026 சட்டமன்ற தேர்தலில் உங்கள் திட்டம் பலிக்காது.. மக்களை ஏமாற்றி வரும் உங்களை மக்களே புறக்கணிப்பார்கள்’ என்று சொன்னார். மேலும் ‘பாஜக பாசிசம்னா நீங்க என்ன பாயாசமா?’ என கேள்வி எழுப்பி அதிர வைத்தார்.

அதேநேரம், மக்கள் பிரச்சனைக்கு போராட்டம் நடத்தாமல் பனையூர் அலுவகத்திலிருந்து அறிக்கைகளை மட்டுமே வெளியிட்டு வருகிறார். விழுப்புரம், திருவண்ணாமலை பகுதிகளில் அதிக மழை பெய்து மக்கள் பாதிக்கப்பட்டபோது எல்லா அரசியல் தலைவர்களும் நேரில் சந்தித்து மக்களுக்கு ஆறுதல் சொல்ல விஜயோ பாதிக்கப்பட்ட சிலரை தனது பனையூர் அலுவகத்திற்கு வரவழைத்து நிவாரண உதவிகளை வழங்கினார். இது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது

இந்நிலையில், சமீபத்தில் அண்ணாமலைக்கும், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்கும் முட்டிக்கொண்டது. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை ‘விஜய்க்கு அரசியல் பற்றி என்ன தெரியும்?.. அவருக்கு என்ன அனுபவம் இருக்கிறது?.. சினிமாவில் நடிகைகளின் இடுப்பை கிள்ளிவிட்டு இப்போது அரசியலுக்கு வந்திருக்கிறார். வொர்க் ஃபிரம் ஹோம் ஸ்டைலில் அரசியல் செய்து கொண்டிருக்கிறார். தவெக நிர்வாகிகள் அடங்கியிருக்க வேண்டும். திமுகவின் பி டீம்தான் விஜய்’ என்றெல்லாம் பேசினார்.

இதையடுத்து விஜயின் ரசிகர்களும், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளும் சமூகவலைத்தளங்களில் அண்ணாமலையை கடுமையாக திட்ட துவங்கிவிட்டனர். இந்நிலையில், விஜய் பற்றி அண்ணாமலை பேசியது பற்றி சீமானிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு ‘விஜய் தேவைப்படும்போது வெளியே வருவார். வந்துதான் ஆக வேண்டும். எனவே, அவரை இப்படி பேசுவது சரியில்லை. நான் கட்சி துவங்கிய போது என்னை பாஜகவின் பி டீம் என்றார்கள். வாய்க்கு வந்ததை பேசிக்கொண்டிருக்கிறார்கள்’ என பதில் சொல்லியிருக்கிறார்.<>

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாடு நிராகரிக்கும்! - அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி!

50 கோடி ரூபாய்க்கு நாய் வாங்கிய பெங்களூர் நபர்! உலகின் விலை உயர்ந்த நாயிடம் என்ன ஸ்பெஷல்?

பேரூர் ஆதீனத்தில் துவங்கிய “ஒரு கிராமம் ஒரு அரச மரம்” திட்டம்! - தமிழகத்தின் அனைத்து கிராமங்களிலும் செயல்படுத்த இலக்கு!

ஸ்டாலின் வைத்த குற்றச்சாட்டு.. சட்டசபை பதிலுரையை புறக்கணித்த வேல்முருகன்!

பட்டப்பகலில் பட்டாக்கத்தி வீசிய கும்பல்! பிரபல ரவுடி கொடூரக் கொலை! - காரைக்குடியில் அதிர்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments